பாஜகவா? இண்டியா? ஆதரவு யாருக்கு? ஒரு முக்கிய நிபந்தனை இருக்கு! பிரஸ் மீட்டுக்கு தயாரான சந்திரபாபு! - Seithipunal
Seithipunal


நடந்து முடிந்த மக்களவை பொதுத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. இந்த மக்களவைத் தேர்தல் முடிவில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 292 இடங்களில் வெற்றி பெற்று மத்தியில் கூட்டணி ஆட்சி அமைக்க உள்ளது. 

இதேபோல் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகளின் இண்டி கூட்டணி 234 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. மேலும் மத்தியில் ஆட்சியைப் பிடிப்பதற்கு உண்டான வியூகங்களையும் காங்கிரஸ் கட்சி வகுத்து வருகின்றது. 

இதற்கிடையே இன்று காலை 11 மணியளவில் மத்திய அமைச்சரவை கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் கூட உள்ளது. இந்த கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதே சமயத்தில் தலைநகர் டெல்லியில் இண்டி கூட்டணியில் உள்ள கட்சித் தலைவர்கள்  இன்று முக்கிய ஆலோசனை கூட்டத்தில் ஈடுபட உள்ளனர். 

பாஜக கூட்டணியில் இடம் பெற்றுள்ள தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும், ஆந்திர மாநிலத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ளவருமான சந்திரபாபு நாயுடு பிரதமர் வேட்பாளர் யார்? தன்னுடைய ஆதரவு யாருக்கு? என்பது குறித்து செய்தியாளர்களை சந்தித்து தனது நிலைப்பாட்டை தெரிவிக்க போவதாக அறிவித்துள்ளார்.

மேலும், ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து கொடுத்தால் மட்டுமே ஆதரவு என்ற நிபந்தனையும் சந்திரபாபு விதிப்பார் என்றும் சொல்லப்படுகிறது.

பாஜக மத்தியில் ஆட்சி அமைக்க வேண்டுமென்றால், சந்திரபாபு (TDP -16) மற்றும் நிதிஷ் குமார் (ஜனதா தல் - 12) ஆதரவு நிச்சயமாக தேவைப்படுகிறது. இவர்களின் ஆதரவு இல்லாமலும் பாஜகவால் ஆட்சி அமைக்க முடியும் என்றாலும், ஒரு நிலையான ஆட்சியை 5 வருடம் முழுமையாக கொடுக்கவே பாஜக முற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

TDP Chandrababu Press meet BJP or INDIAlliance


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->