பெண்கள் தங்களை கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும் - உயர்நீதிமன்ற சர்ச்சை தீர்ப்பை ரத்து செய்த உச்சநீதிமன்றம்! - Seithipunal
Seithipunal


பெண்கள் தங்களை பாலியல் குற்றங்களில் இருந்து காப்பாற்றிக் கொள்ள, அவர்களின் பாலியல் இச்சைகளை கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று, கொல்கத்தா உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உச்சநீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

கடந்த வருடம் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில், மைனர் பெண் ஒருவரை இளைஞர் ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கு ஒன்று விசாரணைக்கு வந்தது. 

இந்த வழக்கில் அந்த சம்பந்தப்பட்ட மைனர் பெண்ணும், அந்த இளைஞரும் காதலித்து வந்ததாகவும், இதனால் இது வன்கொடுமை வழக்கில் சேராது என்றும் தெரிவித்த உயர்நீதிமன்ற நீதிபதி, அந்த இளைஞரை வழக்கில் இருந்து விடுவித்து தீர்ப்பு வழங்கினார்.

மேலும் அந்த தீர்ப்பில், உடல் கண்ணியத்தை காப்பாற்றிக் கொள்ள வேண்டியது ஒவ்வொரு பெண்ணின் கடமை. தங்களுக்கு ஏற்படும் இரண்டு நிமிட பாலியல் திருப்திக்காக தன்னிலையை இழக்கும் பெண்கள் சமுதாயத்தின் பார்வையில் தோல்வியை அடைந்தவர்களாக மாறிவிடுவார்கள். 

பெண்கள் தங்களின் பாலியல் இச்சைகளை கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும். பெண்கள் தங்களின் கண்ணியத்தையும் சுய மதிப்பையும் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். 

ஆண்களின் பாலியல் தூண்டுதலுக்கு ஆளாகி சமூகத்தில் தோற்றுப் போகிவிடக்கூடாது என்று நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்திருந்தார்.

இந்த தீர்ப்பு பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட இளைஞரை விடுவித்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த வழக்கை நேற்று விசாரணை செய்த உச்சநீதிமன்றம் சம்பந்தப்பட்ட அந்த இளைஞரை குற்றவாளி என்று அறிவித்ததுடன், கொல்கத்தா உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு மற்றும் அந்த கருத்தினை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Supreme court judgement for Kolkata High court case


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->