ஏர் கன் துப்பாக்கியின் துணையுடன் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள்: இதுதான் காரணமா..! - Seithipunal
Seithipunal


கேரள மாநிலத்தில் சமீபகாலமாக தெருநாய்களின் தொல்லை அதிகரித்துள்ளதால், நடந்து செல்பவர்கள் மட்டுமின்றி, வாகனங்களில் செல்வோரையும் விரட்டி கடிக்கின்றன. இதுகுறித்து,உயர்நீதி மன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்ய்யப்பட்டது. 

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், தெருநாய்களுக்கு உணவு கொடுப்பவரே அதனால் கடிபடும் நபருக்கான மருத்துவச் செலவை ஏற்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

இந்நிலையில், காசர்கோடு மாவட்டம் பேக்கல் என்ற ஊரைச் சேர்ந்த ஒருவர் குழந்தைகளை துப்பாக்கி ஏந்தியபடி அழைத்துச் செல்லும் வீடியோ இணையதளத்தில், வெளியாகி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது. 

இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், "தெருநாய்களின் தொல்லை அதிகரித்துள்ளதால் பள்ளிக்குச் செல்லவே குழந்தைகள் பயப்படுகின்றனர். குழந்தைகளைப் பாதுகாக்கவே இந்த ஏர் கன் துப்பாக்கியை ஏந்தியபடி மாணவியரை அழைத்துச் செல்கிறேன்" என்று தெரிவித்தார். 

கேரள அரசின் தகவல் படி, இதுவரை கேரளாவில் 21 பேர் வெறிநாய்க்கடியால் இறந்துள்ளனர். அவர்களில், பாதிக்கப்பட்ட ஐந்து பேர், ரேபிஸ் தடுப்பூசியை எடுத்துக் கொண்டனர். கேரளாவில் வெறிநாய்க்கடிக்கு எதிரான தடுப்பூசிகள் பயனற்றதாக மாறி வருகிறது. இது குறித்து சமீபகாலமாக பெரும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. 

இதுவரை இந்தியாவில் 1.5 கோடி நாய்கடி வழக்குகள் பதிவாகியுள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. அதிகபட்சமாக உத்தரப் பிரதேசத்திலும் இதையடுத்து பிற மாநிலங்களிலும் அதிகமாக இறப்புகள் பதிவாகியுள்ளன. 

இந்தியா ஒவ்வொரு ஆண்டும் 100க்கும் மேற்பட்ட ரேபிஸ் வழக்குகள் மற்றும் இறப்புகளைப் பதிவு செய்கிறது. இருப்பினும், செல்லப்பிராணிகளை விட தெருநாய்கள் கடிக்கும் சம்பவங்கள் அதிகம். மேலும், மணிப்பூர், லட்சத்தீவு மற்றும் தாத்ரா & நகர் ஹவேலி ஆகிய இடங்களில் தெருநாய்கள் இல்லை.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

street dogs attack people


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->