சுடுகாட்டில் சாம்பலான பெண் 27 மாதங்களுக்குப் பின் கதவைத் தட்டிய விசித்திரம்...! வெளிவந்த திடுக்கிடும் உண்மை...! - Seithipunal
Seithipunal


உத்தரபிரதேசத்தில் காணாமல் போன பெண் இறந்துவிட்டதாக கருதி குடும்பத்தினர் இறுதிச்சடங்கு செய்த நிலையில், 27 மாதங்களுக்கு பிறகு அதே பெண் உயிருடன் வீடு திரும்பிய சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.லக்னோ அருகே நவிகோட் நந்தனா கிராமத்தைச் சேர்ந்த 28 வயதான சிவானி, கடந்த 2024-ம் ஆண்டு மே 2-ந் தேதி திடீரென காணாமல் போனதாக தெரிவிக்கப்படுகிறது. அவரை குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியும் எந்த தகவலும் கிடைக்கவில்லை.

இந்த நிலையில், அதே ஆண்டு ஜூலை 16-ந் தேதி அப்பகுதியில் உள்ள கால்வாயில் அடையாளம் காண முடியாத அளவுக்கு அழுகிய நிலையில் பெண்ணின் உடல் ஒன்று கண்டெடுக்கப்பட்டது.அந்த உடலின் கையில் கட்டப்பட்டிருந்த கயிறு மற்றும் விரலில் அணிந்திருந்த மோதிரம் உள்ளிட்ட சில அடையாளங்களை வைத்து, அது சிவானியின் உடல் என அவரது குடும்பத்தினர் அடையாளம் கண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதையடுத்து, அந்த உடல் சிவானியுடையது என்ற நம்பிக்கையில் குடும்பத்தினர் இறுதிச்சடங்குகளை செய்து உடலை தகனம் செய்தனர்.ஆனால், அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தும் வகையில், காணாமல் போனதாக கருதப்பட்ட சிவானி 27 மாதங்களுக்கு பிறகு கடந்த சனிக்கிழமை தனது பெற்றோர் வீட்டுக்கு உயிருடன் திரும்பியுள்ளார்.அவர் லக்னோவின் பாரா பகுதியில் ஜாவேத் என்பவருடன் வசித்து வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

நீண்ட இடைவெளிக்கு பிறகு சிவானி திடீரென வீட்டுக்கு வந்ததால் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.சிவானி உயிருடன் திரும்பியுள்ள நிலையில், அவரது குடும்பத்தினர் அடையாளம் கண்டு இறுதிச்சடங்கு செய்த அந்த உடல் யாருடையது என்ற மிகப்பெரிய கேள்வி தற்போது எழுந்துள்ளது.

அந்த உடலின் அடையாளம் எவ்வாறு சிவானியுடன் தொடர்புபடுத்தப்பட்டது, உண்மையில் உயிரிழந்த பெண் யார் என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு விடை தேடும் வகையில் காவலர்கள் மீண்டும் விசாரணையை தொடங்கியுள்ளனர்.27 மாதங்களுக்கு முன்பு முடிவுக்கு வந்ததாக கருதப்பட்ட இந்த சம்பவம், சிவானியின் எதிர்பாராத வருகையால் தற்போது மர்மமாக மாறியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

strange incident woman lying ashes crematorium knocking door after 27 months shocking truth revealed


கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...




சினிமா

Seithipunal
--> -->