ஆந்திராவில் சோகம் - ஷாப்பிங் சென்ற போது மணமகன் உள்பட 6 பேர் பலி.! - Seithipunal
Seithipunal


ஆந்திரா மாநிலத்தில் உள்ள அனந்தபூர் மாவட்டத்தை சேர்ந்தவர் பெரோஸ் பாஷா. இவருக்கு சில நாட்களில் திருமணம் நடைபெற உள்ளதால்,  தனது குடும்பத்தினர் ஏழு பேருடன் காரில் ஹைதராபாத்துக்கு சென்றுள்ளார். பின்னர் அவர்கள் வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது, பாச்சுபள்ளி அருகே கார் எதிர்பாராத விதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து எதிர் சாலையில் சென்று ​​எதிரே வந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. 

இந்த விபத்தில் மணமகன் பெரோஸ் பாஷா, குழந்தைகள், இரண்டு பெண்கள், இரண்டு ஆண்கள் என்று ஆறு பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக நடத்திய முதற்கட்ட விசாரணையில், கார் ஓட்டுநர் தூங்கியதால் விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

six peoples died accident in andira


கருத்துக் கணிப்பு

பாஜகவுடன் 2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி இல்லை என்ற நிலைப்பாட்டில் எடப்பாடி பழனிச்சாமி உறுதியாக இருப்பாரா?Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜகவுடன் 2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி இல்லை என்ற நிலைப்பாட்டில் எடப்பாடி பழனிச்சாமி உறுதியாக இருப்பாரா?
Seithipunal
--> -->