பீகாரில் சோகம் - வெடிகுண்டு வெடித்து 6 குழந்தைகள் படுகாயம்.!
six childrens injured for bomb explossion in bihar
பீகார் மாநிலத்தில் உள்ள பெகுசராய் மாவட்டம் பிக்சரா கிராமத்தில் பைடியாநாத் சிங் என்பவருக்கு சொந்தமான பழைய பாழடைந்த வீட்டிற்குள் குழந்தைகள் சிலர் விளையாடிக் கொண்டிருந்தனர்.
அப்போது அவர்கள் விளையாடிக் கொண்டிருந்த பந்து வீட்டிற்கு உள்ளே விழுந்துள்ளதையடுத்து ஒரு சிறுமி அந்த பந்தை எடுக்கச் சென்றுள்ளார். ஆனால், அங்கு பெட்டி போன்ற பொருள் இருந்ததை கண்ட அவர் ஆர்வத்துடன் அதனை வெளியில் எடுத்து வந்துள்ளார்.
பின்னர் அந்த பெட்டியை பிரித்து பார்த்ததில் பந்து போன்ற பொருள் இருந்ததால், அதை சுவற்றின் மீது வீசியுள்ளார். அது திடீரென வெடித்து சிதறியது. இதில் 6 குழந்தைகள் படுகாயம் அடைந்தனர்.
இதைப்பார்த்து ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் படுகாயமடைந்த சிறுவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர். இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து நிகழ்விடத்திற்கு விரைந்து வந்த போலீஸார் அங்கு வெடிகுண்டு நிபுணர்களுடன் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
six childrens injured for bomb explossion in bihar