பிரதமர் மோடி விடுத்த அழைப்பு... இந்தியா வரும் சிங்கப்பூர் பிரதமர்!
Singaporean Prime Minister Lawrence Wong visiting India
சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வாங், மூன்று நாள் அரசு முறைப் பயணமாக இந்தியா வருகிறார். பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று அவர் இன்று (செப்டம்பர் 2) தலைநகர் டெல்லி வருகை தருகிறார்.
டெல்லியில் அவர் முதலில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்து மரியாதை செலுத்துவார். பின்னர், பிரதமர் மோடி அளிக்கும் விருந்தில் கலந்து கொள்வதும் திட்டமிடப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் உள்ளிட்ட முக்கிய அரசுத் தலைவர்களையும் சந்தித்து உரையாட உள்ளார்.
அதிகாரப்பூர்வ அறிக்கையின்படி, பிரதமர் லாரன்ஸ் வாங் தனது பயணத்தின் போது மகாத்மா காந்தியின் நினைவிடமான ராஜ்காத்தில் அஞ்சலி செலுத்துவார். மேலும், இந்தியாவில் வாழும் சிங்கப்பூர் குடிமக்களையும், இந்திய தொழிலதிபர்களையும் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவார்.
இந்தியாவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான ராஜதந்திர உறவுகள் தொடங்கியதில் 60 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள இந்த நேரத்தில், பிரதமர் வாங் மேற்கொள்ளும் விஜயம் சிறப்பான முக்கியத்துவம் பெறுகிறது. இது இரு நாடுகளுக்குமிடையிலான பொருளாதாரம், வணிகம், தொழில்நுட்பம், பாதுகாப்பு உள்ளிட்ட பல துறைகளில் கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்தும் முயற்சியாகக் கருதப்படுகிறது.
English Summary
Singaporean Prime Minister Lawrence Wong visiting India