#JUST IN || அனைத்து டெண்டர்களையும் உடனே நிறுத்துங்க.. சித்தராமையா போட்ட அதிரடி உத்தரவு..!!
Siddaramaiah ordered to terminate all agreements made in previous regime
கர்நாடக மாநிலத்தின் முதல்வராக சித்தராமையா மற்றும் துணை முதல்வராக டி.கே சிவக்குமார் ஆகியோர் கடந்த சனிக்கிழமை பதவி ஏற்றுக்கொண்டனர். இவர்களுடன் மேலும் 8 அமைச்சர்களும் பதவியேற்று கொண்டனர்.
இந்த நிலையில் இன்று முறைப்படி கர்நாடக மாநிலத்தின் சட்டப்பேரவை அதிகாரப்பூர்வமாக கூடியது. இன்று கூட்டப்பட்ட சட்டப்பேரவையில் கர்நாடக மாநில எம்எல்ஏக்கள் பதவி ஏற்று கொண்டனர். கர்நாடக மாநில முதல்வராக சித்தராமையா பதவி ஏற்றதிலிருந்து பல அதிரடி மாற்றங்களை கொண்டு வருவார் என எதிர்பார்க்கப்பட்டது.

அதன்படி சற்று முன்னர் கடந்த பாஜக அரசால் மேற்கொள்ளப்பட்ட அனைத்து துறைகள் மற்றும் மாநகராட்சிகள்/ வாரியங்கள்/அதிகாரிகள் மூலம் மேற்கொள்ளப்பட்ட பணிகள் தொடர்பாக அனைத்து ஒப்பந்தங்கள் மற்றும் அதற்கான நிதிகளை உடனடியாக நிறுத்தவும், துவங்கப்படாத அனைத்து பணிகளையும் நிறுத்தவும் முதலமைச்சர் சித்தராமையா உத்தரவிட்டுள்ளார்.
கடந்த பாஜக ஆட்சியில் கர்நாடகா அரசால் வழங்கப்பட்ட அனைத்து டெண்டர்களிலும் 40 சதவீத கமிஷன் பெறப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் தற்பொழுது அனைத்து ஒப்பந்தங்களையும் நிறுத்துமாறு புதிய முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Siddaramaiah ordered to terminate all agreements made in previous regime