நச்சு துகள்களைக் கட்டுப்படுத்த அனல் மின் நிலையங்களுக்கு விலக்கு... அதிர்ச்சி கொடுத்த மத்திய அரசு!
shocking announce central govt
நாட்டில் இயங்கும் அனல் மின் நிலையங்களில், காற்று மாசுபாட்டை குறைக்கும் தொழில்நுட்பம் செயல்படுத்தும் கட்டாயத்திலிருந்து, 78% மின் நிலையங்கள் விலக்கப்பட்டுள்ளன.
நிலக்கரி போன்ற எரிபொருள்களில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் போது, சல்பர் டை ஆக்ஸைடு போன்ற நச்சு வாயுக்கள் புகைப்போக்கி வழியாக வெளியேறுகிறது. இதனால் உண்டாகும் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த ‘ஃபுளு கேஸ் டி-சல்பியூரிசேசன்’ முறை உலகம் முழுவதும் பயன்படுத்தப்படுகிறது.
ஆனால், மத்திய சுற்றுச்சூழல் துறை வெளியிட்ட அறிக்கையில், 10 லட்சம் மக்கள் தொகை கொண்ட நகரங்களுக்கு 10 கி.மீ. தொலைவுக்கு வெளியே இயங்கும் மின் நிலையங்களுக்கு, இந்த முறையை அமைக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் உள்ள 600க்கும் மேற்பட்ட மின் உற்பத்தி அலகுகளில், 78% -க்கு இந்த விலக்கு பொருந்தும். ஏற்கனவே பத்திரிகை புள்ளிவிவரங்களின்படி, இம்முறை அமைப்பதற்காக அதிக முதலீடு, நீர், மின் தேவைப்படும் என்பதாலும், ஒவ்வொரு மின் யூனிட்டுக்கும் 25–30 காசுகள் செலவாகும் என்பதாலும், செலவைக் குறைக்க இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக, ஏ மற்றும் பி பிரிவுகளுக்குள் உள்ள மின் நிலையங்கள் மட்டும் கட்டாயம் இந்த முறை நிறுவ வேண்டும் என்றும், சி பிரிவின் 78% மின் நிலையங்கள் விலக்கு பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கடுமையாக எதிர்த்து வருகின்றனர். இது மக்கள் நலத்தைக் குறைவாகக் கருதும் கொள்கையின் வெளிப்பாடு என்றும், காற்று மாசுபாட்டை அதிகரிக்கும் அபாயகரமான தீர்மானம் என்றும் அவர்கள் குற்றம் சாட்டி உள்ளதுடன், இதனை திரும்ப பெற வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.
English Summary
shocking announce central govt