பெங்களூருவில் அதிர்ச்சி...! மாமியார் தொல்லை தாங்காமல் பெண் தற்கொலை...! நடந்தது என்ன...?
Shock Bengaluru Woman commits suicide after being harassed by mother in law What happened
பெங்களூருவில் மாமியாரின் கொடுமையால் மனவேதனை அடைந்த 35 வயதான பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பெங்களூரு அருகே உள்ள சோழ தேவனஹள்ளி பகுதியைச் சேர்ந்த புனித்குமார் (39) என்ற தனியார் நிறுவன ஊழியர், தனது மனைவி சுஷ்மா (35), 4 வயது மகன் தர்ஷன் மற்றும் தாய் கல்பனா (62) ஆகியோருடன் வசித்து வந்தார்.

மென்பொருள் பொறியாளரான சுஷ்மா, கடந்த இரண்டு ஆண்டுகளாக பணியை விட்டு வீட்டிலேயே இருந்து குடும்பத்தை கவனித்து வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.இந்நிலையில், கூடுதல் வரதட்சிணை தொடர்பாக புனித்குமாரின் தாய் கல்பனாவுக்கும் சுஷ்மாவுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது.
நேற்று முன்தினம் சுஷ்மா தயாரித்த உணவு சுவையாக இல்லை என்று குற்றம் சாட்டி கல்பனா கடுமையாக திட்டியதுடன், இனிமேல் சமையலறைக்கு செல்லவே கூடாது என்று கூறியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அந்த வாக்குவாதத்தின் போது புனித்குமாரும் தனது மனைவியை திட்டியதாக தெரிவிக்கப்படுகிறது.இந்த அவமானத்தாலும் மன உளைச்சலாலும் கடும் விரக்தியடைந்த சுஷ்மா, தனது படுக்கையறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் காவலர்கள் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பினர்.சுஷ்மாவின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் கணவர் புனித்குமார் மற்றும் மாமியார் கல்பனா மீது வரதட்சிணை கொடுமை வழக்குப் பதிவு செய்து காவலர்கள் விசாரணை நடத்தினர்.
இதைத்தொடர்ந்து நேற்று இருவரையும் கைது செய்த காவலர்கள், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
தற்கொலை எதற்கும் தீர்வல்ல. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக சுகாதார சேவை உதவி மையம் - 104, சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 ஆகிய எண்களை அழைக்கலாம்.
English Summary
Shock Bengaluru Woman commits suicide after being harassed by mother in law What happened