பெண்கள் விடுதியில் ரகசிய கேமரா, அம்பலமானது சாமியாரின் லீலைகள்!
Secret camera in womens hostel exposed
பெண்கள் விடுதியில் ரகசிய கேமராக்களை வைத்து மாணவிகளின் நடவடிக்கைகளை கண்காணித்து வந்துள்ள சாமியாரின் லீலைகள் வெளிவந்துள்ளது.
டெல்லி வசந்த் கஞ்ச் பகுதியில் ஸ்ரீ சாரதா இந்திய மேலாண் மையம் என்ற பெயரில் செயல்பட்டு வரும் கல்வி நிறுவனத்தில் சுவாமி சைதன்யானந்த சரஸ்வதி என்ற பார்த்தசாரதி என்பவர் இதன் இயக்குநராக உள்ளார்.
இங்கு பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவிகள் ஸ்காலர்ஷிப் பெற்று படித்து வருகின்றனர்.
இந்நிலையில், ஆசிரம வார்டன்கள் சிலர், மாணவிகளை சாமியாரிடம் அறிமுகப்படுத்தி வைத்தனர். அந்த சாமியாரின் வற்புறுத்தலுக்கு ஏற்ப நடந்து கொள்ளும்படி பெண் பணியாளர்கள் மற்றும் நிர்வாகத்தினரும் கூட மாணவிகளுக்கு அழுத்தம் கொடுத்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட மாணவிகள் அளித்த வாக்குமூலம் அடிப்படையில், சாமியாருக்கு எதிராக பாலியல் துன்புறுத்தல் உள்பட பிற வழக்குகளை போலீசார் பதிவு செய்தனர்.
இந்நிலையில் சாமியார், பெண்கள் விடுதியில் ரகசிய கேமராக்களை வைத்து மாணவிகளின் நடவடிக்கைகளை கண்காணித்து வந்துள்ளார். வெளிநாட்டு பயணத்தின்போது அவருடன் வரும்படியும் வலியுறுத்துவார் என அதுபற்றிய எப்.ஐ.ஆர். தெரிவிக்கின்றது.
முன்னாள் மாணவி ஒருவர் இந்த மையத்தின் நிர்வாகத்திற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், சாமியார், அந்த மையத்தில் பாலியல் ரீதியாக மாணவிகளை துன்புறுத்தி வருகிறார் என குற்றச்சாட்டாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதற்கு அடுத்த நாள் அந்த மையத்திற்கு இ-மெயில் ஒன்று சென்றுள்ளது. அதில், பல்வேறு மாணவிகளும் புகார் அளித்துள்ளனர்.
விமான படை அதிகாரிகளுடைய குடும்பத்திலுள்ள பலர் இந்த மையத்தின் மாணவிகளாக இருந்துள்ளனர். இதனை தொடர்ந்தே போலீசை தொடர்பு கொண்டு, சாமியாருக்கு எதிராக கல்வி மையம் சார்பில் அவருக்கு எதிராக 300 பக்கங்கள் கொண்ட சான்றுகளையும் மையம் அனுப்பி உள்ளது.
இதற்கு முன்பும், மோசடி, நம்பிக்கைக்கு எதிராக நடந்து கொள்ளுதல் போன்ற புகார்கள் என அந்த கல்வி மையம் சார்பில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. தப்பியோடிய அவரை தேடி வருகிறோம் என போலீசார் தெரிவித்தனர்.
English Summary
Secret camera in womens hostel exposed