தேர்வுதான் முக்கியம்!  அறுவை சிகிச்சை செய்த நிலையில் ஆம்புலன்சில் தேர்வு எழுதிய மாணவி! - Seithipunal
Seithipunal


மும்பையில் விபத்தில் சிக்கி படுக்கமடைந்த மாணவி, அறுவை சிகிச்சை முடிந்த நிலையில், ஆம்புலன்சில் வைத்து தேர்வு எழுதிய நெகிழ்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.

மகாராஷ்டிராமாநிலம் இஸ்லாமிய பள்ளியை சேர்ந்த (Anjuman-I-Islam's Dr MIJ Girl's High School) மாணவி முபாஷிரா, விபத்திற்கு உள்ளாகி அறுவை சிகிச்சை செய்த பிறகு ஆம்புலன்சில் தனது SSC தேர்வை எழுதியுள்ளார்.

மாணவி தேர்வு எழுத சிறப்பு அனுமதியுடன் பள்ளி நிர்வாகத்தால் ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளது.

இந்த நெகிழ்ச்சி சம்பவம் குறித்து மாணவியின் வகுப்பு ஆசிரியர் சனம் ஷேக் தெரிவிக்கையில், "மாணவி முபாஷிராஎன் வகுப்பில் சிறந்த மாணவிகளில் ஒருவர், முதல் 10 இடங்களுக்குள் வருவார்.

மாணவிக்கு ஏற்பட்ட நிலைகுறித்து கல்வி தேர்வு வாரியத்திற்கு தெரியப்படுத்தி, மாணவி தேர்வு எழுத சிறப்பு அனுமதி பெற்றோம். பின்னர் கேன்சர் எய்ட் & ரிசர்ச் ஃபவுண்டேஷன் மூலம் ஆம்புலன்ஸ் ஒன்றை ஏற்பாடு செய்தோம்.

தொடர்ந்து மாணவியின் வீட்டுக்கே சென்று ஆம்புலன்சில் அழைத்துச் வந்தோம். தேர்வு மையத்தின் வளாகத்தில் ஆம்புலன்ஸை நிறுத்தி, அங்கேயே அவர் தேர்வு எழுதினர்" என்று வகுப்பு ஆசிரியை தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

SCHOOL GIRL EXAM ATTEMT IN AMBULANCE MUMBAI


கருத்துக் கணிப்பு

இதுவரை நீங்கள் 100 யூனிட் விலையில்லா மின்சார சலுகையால் பயன்பெற்றுளீர்களா?



Advertisement

கருத்துக் கணிப்பு

இதுவரை நீங்கள் 100 யூனிட் விலையில்லா மின்சார சலுகையால் பயன்பெற்றுளீர்களா?




Seithipunal
--> -->