விடுதலை.. இன்று முதல் விடுதலை..!! மனைவியின் விவாகரத்தை 40 லிட்டர் பாலில் குளித்து கொண்டாடிய நபர்: இணையத்தில் வைரல்..!
Man celebrates wife divorce by bathing in 40 liters of milk in Assam
அசாமின் நல்பாரி மாவட்டம் போரோலியாபாராவில் வசித்து வருபவர் மாணிக் அலி (32) என்பவர், தனக்கு விவாகரத்து கிடைத்ததை சந்தோசமாக கொண்டியுள்ள புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வைரலாகியுள்ளது.
மாணிக் அலியின் மனைவி திருமணத்துக்கு பின் வேறெரு நபருடன் திருமணத்திற்கு புறம்பான உறவில் இருந்துள்ளார். இதன் காரணமாக அவர் 02 முறை வீட்டை விட்டு ஓடியுள்ளதாக கூறப்படுகிறது. மீண்டும் திரும்பி வந்த மனைவியை மாணிக் அலி தனது மகளுக்காக இருமுறையும் மன்னித்து ஏற்று அவருடன் குடும்பம் நடத்தி வந்துள்ளார்.
-n2ryb.png)
ஆனால், அவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், குறித்த தம்பதியினர் விவாகரத்துக்கான சட்டப்பூர்வமாக நீதிமன்ற உதவியை நாடியுள்ளனர். இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு அவர்களுக்கு சட்டபூர்வமாக விவாகரத்து கிடைத்துள்ளது.
இதனை தொடர்ந்து மாணிக் அலி அதன் கொண்டாட முடிவு செய்துள்ளார். அதன் படி, 04 வாளிகளில் 40 லிட்டர் பாலை நிரப்பி அதில் குளித்து, ''இன்றுமுதல் நான் விடுதலையாகி விட்டேன்'' என்று அறிவித்து தனது விவாகரத்தை கொண்டாடியுள்ளார். இது குறித்த வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறமை குறிப்பிடத்தக்கது.
English Summary
Man celebrates wife divorce by bathing in 40 liters of milk in Assam