ரூ.1000 கோடி செலவில் ஏ.ஐ., பிளஸ் கல்வி வளாகம்: ஆந்திராவில் அமைக்கப்படும்: பிட்ஸ் பிலானி அறிவிப்பு..!
AI Plus educational complex will be set up in Andhra Pradesh at a cost of Rs 1000 crore BITS Pilani announces
ரூ.1000 கோடி செலவில், பிர்லா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி அண்ட் சயின்ஸ் எனப்படும் பிட்ஸ் பிலானி, ஏ.ஐ., பிளஸ் கல்வி வளாகம் ஆந்திர மாநிலம் அமராவதியில் அமைக்க உள்ளதாக பிட்ஸ் பிலானியின் தலைவரும் வேந்தருமான குமார் மங்கலம் பிர்லா அறிவித்துள்ளார். இந்த அறிவிப்புக்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு நன்றி தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் முன்னணி பொறியியல் கல்வி நிறுவனமான பிட்ஸ் பிலானியின் பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. அப்போது அங்கு பேசிய பிலானியின் தலைவர் குமார் மங்கலம் பிர்லா குறிப்பிட்டதாவது:
ஆந்திர தலைநகரான அமராவதியில், ஆண்டுக்கு 7,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயன்பெறும் வகையில், அடுத்த 05 ஆண்டுகளில் ரூ1,000 கோடி முதலீடு செய்து, ஏ.ஐ., பிளஸ் கல்வி வளாகம் உருவாக்க திட்டமிட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
-khasu.png)
ஆந்திரப் பிரதேச அரசு, ஏ.பி.சி.ஆர்.டி.ஏ., மூலம் ஏற்கனவே இதற்கு நிலம் ஒதுக்கியுள்ளது. இதனால், அதிநவீன கல்விக்கான அதன் தடத்தையும் உறுதிப்பாட்டையும் கணிசமாக விரிவுபடுத்தும் ஒரு மைல்கல் நடவடிக்கையாக அங்கு முதலீடு செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அத்துடன், இந்த ஏ.ஐ., பிளஸ் கல்வி வளாகத்தின் கவனம் நமது எதிர்காலத்தை வரையறுக்கும் தொழில்நுட்பங்களில் தலைமைத்துவத்திற்கு இந்திய மாணவர்களை தயார்படுத்துவதாக இருக்கும் என்றும், இது, டேட்டா சயின்ஸ், ரோபாட்டிக்ஸ், கணக்கீட்டு மொழியியல் மற்றும் சைபர்-பிசிகல் அமைப்புகளில் நிபுணத்துவம் பெறும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
-agpml.png)
அத்துடன், இந்தப் புதிய வளாகத்தின் மேம்பாடு இரண்டு கட்டங்களாக நிறைவடையும் என்றும், முதல் கட்டம் 3,000 மாணவர்களுக்கு உதவும் என்றும், இரண்டாம் கட்டம்7,000-க்கும் அதிகமாக உயர்த்தும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், மேம்பட்ட ஆராய்ச்சி மையங்கள், தொழில் முனைவோர் மையங்கள் ஆகியவையும் இங்கு இருக்கும் என்றும், அமராவதி வளாகம், நிலையான உள்கட்டமைப்புடன் ஆராய்ச்சி மற்றும் தொழில்முனைவோருக்கான மையமாகவும் செயல்படும் என்றும் அறிவித்துள்ளார்.
English Summary
AI Plus educational complex will be set up in Andhra Pradesh at a cost of Rs 1000 crore BITS Pilani announces