18 முதல் 30 வயது வரை 18 மாதங்கள் ராணுவப் பயிற்சி கட்டாயம்! எந்த நாட்டில்? ஏன் தெரியுமா?
cambodiya army training
தெற்காசிய நாடான கம்போடியாவில், 18 வயது முழுமையாக நிறைவடைந்த அனைத்து குடிமக்களும் ராணுவத்தில் பணியாற்றுவது கட்டாயம் என அரசு அறிவித்துள்ளது.
18 முதல் 30 வயதுவரையுள்ள இளைஞர்கள் 18 மாதங்கள் ராணுவப் பயிற்சி மற்றும் பணியில் ஈடுபடவேண்டும் என திங்கள்கிழமை (ஜூலை 14) உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்த நடவடிக்கை, கம்போடியா – தாய்லாந்து எல்லையில் ஏற்பட்ட பதற்ற நிலைக்கு அடுத்தபடியாக எடுக்கப்பட்டது. சமீபத்திய சண்டை ஒன்றில் கம்போடிய ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்ததை அடுத்து, நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
மூலமாக, கடந்த 2006-ல் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ‘கட்டாய ராணுவ சேவை சட்டம்’, 2026 ஆம் ஆண்டு முதல் முழுமையாக செயல்படுத்தப்பட உள்ளதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இளைய தலைமுறையை ராணுவத்துக்கு தயார்படுத்தும் முயற்சியாகவும், நாட்டின் உள்கட்டமைப்பு பாதுகாப்பை வலுப்படுத்தும் நடவடிக்கையாகவும் இந்த திட்டம் காணப்படுகிறது.