காஞ்சிபுரத்தில் எரிவாயு கசிவால் தீவிபத்து – கர்ப்பிணிப் பெண் மற்றும் மகள் பலி!
kanjipuram pillaiyarpalaiyam fire accident
காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் பகுதியில் உள்ள வீட்டில் சமையல் எரிவாயு கசிவால் ஏற்பட்ட தீவிபத்தில் கருவுற்ற பெண் மற்றும் அவரது 8 வயது மகள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
விளக்கொளிப் பெருமாள் கோயில் தோப்புத் தெருவைச் சேர்ந்த மோகன்ராஜ் (34) என்பவரின் மனைவி மணிமேகலை (29), கர்ப்பமாக இருந்த நிலையில், மகள் கிருபாஷினியுடன் தந்தையின் வீட்டுக்குச் சென்றிருந்தார்.
திங்கள்கிழமை காலை மணிமேகலையும் கிருபாஷினியும் குளியலறையில் இருந்த போது, சமையலறையில் இருந்த எரிவாயு சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு தீவிபத்து ஏற்பட்டது.
வீட்டிலிருந்தவர்கள் விரைந்து வெளியேறினாலும், குளியலறையில் இருந்த இருவரும் அதைவிட்டு வெளியே வரும் நேரத்தில் தீயில் சிக்கினர்.
அக்கம்பக்கத்தினர் தீயில் சிக்கிய அவர்களை மீட்டு முதலில் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு, பின்னர் மேல்சிகிச்சைக்காக சென்னையிலுள்ள கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். ஆனால் தீவிர காயங்களால் இருவரும் உயிரிழந்தனர். சம்பவம் தொடர்பாக சிவகாஞ்சி காவல்துறை வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.
English Summary
kanjipuram pillaiyarpalaiyam fire accident