பாஜக எம்பி.,க்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்!
SC Condemn to BJP MP
உச்சநீதிமன்றம் குறித்து பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே வெளியிட்ட கருத்து தீவிர சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அதில் “நீதிமன்றம் தான் சட்டம் இயற்றும் என்றால், நாடாளுமன்றம், சட்டப்பேரவை ஆகியவை மூடப்படலாமே. நாட்டில் நடைபெறும் மதச்சச்சரவுகளுக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியே நேரடி பொறுப்பு” என்று அவர் பேசி இருந்தார்.
இதற்குப் பதிலளித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா தலைமையிலான அமர்வு, “இது மிகுந்த பொறுப்பற்ற மற்றும் அரசியலமைப்புச் சட்ட அறியாமையை வெளிப்படுத்தும் அறிக்கை” என கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், வக்ஃப் திருத்தச் சட்டத்தை கடுமையாக விமர்சித்த முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையாளர் எஸ்.ஒய். குரேஷியின் கருத்தும் கவனத்தை ஈர்த்துள்ளது. கடந்த ஏப்ரல் 17ஆம் தேதி, “வக்ஃப் சட்டம் முஸ்லிம்களின் நிலங்களை பறிக்கும் பாகுபாடான சட்டம். உச்சநீதிமன்றம் அதை ரத்து செய்யும்” எனக் கூறினார்.
இதற்கும் கடுமையான பதிலளித்த துபே, “நீங்கள் தேர்தல் ஆணையராக அல்ல, முஸ்லிம் ஆணையராகவே செயல்பட்டீர்கள். உங்கள் காலத்தில் ஜார்க்கண்டில் பலர் வங்கதேசியர்களாக இருந்தும் வாக்காளர்களாக மாற்றப்பட்டனர்” எனக் குற்றம்சாட்டி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.