#BigBreaking:: நீட் தேர்வு விவகாரம்.. தமிழக அரசின் ரிட் மனுவை வாபஸ் பெற உச்சநீதிமன்றம் அனுமதி..!! - Seithipunal
Seithipunal


நீட் தேர்வை கட்டாயமாக்கிய மத்திய அரசின் சட்டத்தை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த ரிட் மனுவை திரும்ப பெற விருப்பம் தெரிவித்து தமிழக அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. 

இதனை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவை திரும்ப பெற அனுமதி வழங்கி உள்ளது. கடந்த 2017-2018 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட இந்திய மருத்துவ கவுன்சில் சட்ட திருத்தத்திற்கு எதிராக தமிழக அரசு ரிட் மனு தாக்கல் செய்திருந்தது.

இந்த மனு மீது கடந்த முறை நடைபெற்ற விசாரணையின் பொழுது தமிழக அரசால் இளங்கலை மருத்துவப் படிப்பிற்கான சட்டம் நிறைவேற்றப்பட்டு ஆளுநர் மூலம் குடியரசு தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

எனவே நீட் தேர்வு தொடர்பாக தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு மீதான விசாரணையை ஆறு மாதத்திற்கு தள்ளி வைக்க வேண்டும் என தமிழக அரசு கேட்டுக் கொண்டது.

அந்த கோரிக்கையை ஏற்ற உச்ச நீதிமன்றம் 12 வாரங்களுக்கு தள்ளி வைத்திருந்த நிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த பொழுது தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட நீட் தேர்வு தொடர்பான ரிட் மனுவை வாபஸ் பெற விரும்புவதாக கோரி தமிழக அரசு மனு தாக்கல் செய்தது.

மேலும் தமிழக அரசால் கொண்டுவரப்பட்ட சட்ட திருத்தம் தொடர்பான மனு கடந்த பிப்ரவரி 18ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொண்டதால் இந்த ரிட் மனுவை வாபஸ் பெற அனுமதிக்க வேண்டும் என தமிழக அரசு சார்பில் வாதிடப்பட்டது. இதனை ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்றம் நீட தேர்வு தொடர்பாக தமிழக அரசு தாக்கல் செய்த ரிட் மனுவை திரும்ப பெற அனுமதி வழங்கி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

SC allows withdrawal TNgovt neet exam writ petition


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->