சுஷாந்தின் மரணத்தில் இருக்கும் அரசியலை அப்பட்டமாக உறுதி செய்யும் சரத் பவார்..!! - Seithipunal
Seithipunal


நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து, அவரது குடும்பத்தினர் அவர் தற்கொலைக்கு தூண்டபட்டார் என்று குற்றம்சாட்டியது. மேலும், மும்பை போலீஸ் இந்த வழக்கை சரியாக கையாளவில்லை என்று கூறி, பீகார் மாநில அரசு அவரது தந்தை அளித்த புகாரின் பேரில் விசாரணை நடத்தி வருகின்றது. 

இந்த வழக்கு விவகாரத்தில் பீகார் அரசுக்கும், மகாராஷ்டிர அரசுக்கும் மோதல் உருவாகி இருக்கின்றது. சிபிஐ விசாரணை வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டு வருகின்றது. இது குறித்து தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார் தனது கருத்தை வெளியிட்டு இருக்கின்றார்.

"இதை ஒரு பெரிய விஷயமாக நான் நினைக்கவில்லை. விவசாயிகள் தற்கொலை செய்து இருக்கின்றனர். அது குறித்து யாருமே பேசவில்லை. என்று விவசாயிகள் கூறுகின்றனர். மகாராஷ்டிரா மற்றும் மும்பை போலீசார் 50 வருடங்களாக பார்க்கிறேன். எனக்கு அவர்கள் மீது நம்பிக்கை இருக்கிறது. 

மற்றவர்கள் குற்றம் சாட்டியதை பெரிதுபடுத்த விரும்பவில்லை. சிபிஐ அல்லது வேறு ஏஜென்சி இந்த விஷயத்தை விசாரிக்க வேண்டும் என்று நினைக்கும் பட்சத்தில், அதை நான் எதிர்க்க மாட்டேன்." என்று தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து சரத் பவாரின் பேரனும் துணை முதல்-மந்திரி அஜித்பவாரின் மகனுமான பர்த் பவார்," சுஷாந்த் சிங் வழக்கை சிபிஐ இடம் ஒப்படைக்க வேண்டும்." என்று கோரிக்கை வைத்திருந்தார். இது குறித்து கேள்வி எழுப்பப்பட்ட போது, "எனது பேரன் கூறிய கருத்துக்கு நான் எந்த வகையிலும் பொறுப்பாக முடியாது. இளைஞரான அவர் முதிர்ச்சியற்றவர்." என்று சரத் பவார் பதிலளித்துள்ளார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sarat Bhavar speech about Sushanth Singh Rajput Suicide


கருத்துக் கணிப்பு

சரத்குமார் தனது கட்சியை பாஜகவுடன் இணைந்திருப்பது யாருக்கு லாபம்?



Advertisement

கருத்துக் கணிப்பு

சரத்குமார் தனது கட்சியை பாஜகவுடன் இணைந்திருப்பது யாருக்கு லாபம்?




Seithipunal
--> -->