கரும்பு விளைச்சல் பாதிப்பு; சர்க்கரை விலை கிடுகிடு உயர்வு; டீ, காபி விலை உயரும் அபாயம்; பண்டிகைகள் நெருங்கும் நிலையில் இப்படியா..?
Risk of tea and coffee prices rising due to sugar price hike
சர்க்கரை விலை, கிலோவுக்கு 25 ரூபாய் வரை கிடுகிடுவென அதிகரித்துள்ளதால் பொதுமக்கள், டீக்கடை உரிமையாளர்கள், இனிப்பகம் உரிமையாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
கடந்த வாரம் 02 ஆயிரத்து 150 ரூபாயாக இருந்த, 50 கிலோ எடை கொண்ட வெள்ளை சர்க்கரை மூட்டையின் விலை, தற்போது 03 ஆயிரத்து 500 ரூபாயாக உயர்ந்துள்ளது. இதனால், சில்லறை விற்பனையில் கிலோவுக்கு 44 ரூபாயாக இருந்த சர்க்கரை 68 ரூபாயாக உயர்ந்துள்ளது.

அத்துடன், வெல்லம் கிலோவுக்கு 55 ரூபாயில் இருந்து 80 ரூபாயாகவும், நாட்டு சர்க்கரையும் கிலோவுக்கு 55 ரூபாயில் இருந்து 70 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது.
கரும்பு விளைச்சல் பாதிப்பு உள்ளிட்ட காரணங்களால் சர்க்கரை விலை உயர்ந்துள்ள நிலையில், திடீர் விலையேற்றம் காரணமாக டீக்கடை, இனிப்பக உரிமையாளர்கள் பாதிப்படைந்துள்ளதாக கூறுகின்றனர்.
குறிப்பாக, பண்டிகைகள் நெருங்கும் நிலையில் சர்க்கரை மற்றும் வெல்லத்தின் விலை உயர்வு சிரமத்தை ஏற்படுத்தும் என பொதுமக்கள் கூறுகின்றனர். தற்போது சர்க்கரை விலையை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
English Summary
Risk of tea and coffee prices rising due to sugar price hike