2026-27 ஆம் ஆண்டுக்கான புதுச்சேரி பட்ஜெட் : முதலமைச்சர் ரங்கசாமி நாளை தாக்கல் செய்கிறார்..! - Seithipunal
Seithipunal


புதுச்சேரி சட்டப்பேரவையில் 2026-27 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை முதலமைச்சர் ரங்கசாமி திங்கட்கிழமை மாலை தாக்கல் செய்யவுள்ளார்.

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் 16 ஆவது சட்டப்பேரவையின் முதல் கூட்டம் நாளை திங்கட்கிழமை தொடங்குகிறது. அதன்படி, நாளைய காலை 09.30 மணியளவில் துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் உரையாற்றுகிறார். பின்னர், பிற்பகல் 03 மணிக்கு நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் ரங்கசாமி 14 ஆயிரத்து 300 கோடி ரூபாய்க்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்கிறார்.

இந்த நிதிநிலை அறிக்கைக்கு இறுதி வடிவம் கொடுக்கும் வகையில், முதலமைச்சர் ரங்கசாமி தலைமையில் சனிக்கிழமை இரவு அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. சுமார் ஐந்து மணி நேரம் நடைபெற்ற கூட்டத்தில் ஆளுநர் உரை இறுதி செய்யப்பட்டது.

இந்த நிதிநிலை அறிக்கையில் இடம் பெறக் கூடிய புதிய அறிவிப்புகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. அத்துடன், துணைநிலை ஆளுநர் உரை மற்றும் முதலமைச்சரின் நிதிநிலை அறிக்கை உரையை நேரடியாக ஒளிபரப்பு செய்ய சட்டமன்ற செயலகம் விரிவான ஏற்பாடு செய்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Puducherry Budget to be presented by Chief Minister Rangasamy tomorrow


கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...




Seithipunal
--> -->