டெல்லி செங்கோட்டை சுதந்திர நாள் விழாவை புறக்கணித்த LoP ராகுல்காந்தி & காங்கிரஸ்!
Red Fort celebrations Congress Rahul Kharge boycott
டெல்லி செங்கோட்டையில் நடைபெற்ற 78வது சுதந்திர நாள் விழாவை மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி புறக்கணித்தனர்.
இன்று காலை நடைபெற்ற இவ்விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, 12வது முறையாக தேசியக் கொடியை ஏற்றி உரையாற்றினார். மத்திய அமைச்சர்கள் மற்றும் பல்வேறு அரசியல், நிர்வாகத் தலைவர்கள் பங்கேற்றாலும், மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்கள் வரவில்லை.
இதற்கு பதிலாக, தில்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் தனியாக சுதந்திர நாள் விழா நடத்தப்பட்டது. இதில் கார்கே, ராகுல் காந்தி உள்ளிட்ட பல்வேறு காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கலந்துகொண்டு தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினர்.
கடந்த ஆண்டு சுதந்திர தினத்தில், செங்கோட்டையில் எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்திக்கு கடைசி வரிசையில் இருக்கை ஒதுக்கப்பட்டது பெரிய சர்ச்சையாகியது. இதனை எதிர்க்கட்சிகள் அவமதிப்பாகக் கண்டித்திருந்தன. இந்த ஆண்டு, அந்த விவகாரத்தின் தொடர்ச்சியாகவே முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்கள் அரசு நடத்திய மைய விழாவை புறக்கணித்ததாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.
English Summary
Red Fort celebrations Congress Rahul Kharge boycott