பஹல்காம் தாக்குதல் - உத்தர பிரதேசம் மாநிலத்திற்கு ரெட் அலார்ட்.!!
red alert to uttar pradesh for pahalkam attack
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய ராணுவத்தால் 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் தீவிரவாதிகளின் முகாம்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.
முப்படைகள் கூட்டாக இணைந்து நடத்திய தாக்குதலில் சுமார் 26 தீவிரவாதிகள் உயிரிழந்தனர். 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதையடுத்து இந்தியா ராணுவத்தின் இந்தத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கப்படும் என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் எதிரொலியாக இந்தியாவில் உள்ள உத்தரபிரதேச மாநிலத்திற்கு ரெட் அலார்ட் விடுக்கப்பட்டுள்ளது.
உத்தரபிரதேச மாநில போலீசார் பாதுகாப்பு படையினருடன் இணைந்து செயல்படும்படியும் உத்தரபிரதேச மாநிலத்தின் காவல்துறையினர் முக்கிய இடங்களில் பாதுகாப்பை வலுப்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
English Summary
red alert to uttar pradesh for pahalkam attack