கோழிக்கோடு விமான விபத்து! அதிரவைக்கும் உண்மையான காரணம்!  - Seithipunal
Seithipunal


கடந்த வெள்ளிக்கிழமை இரவு கோழிக்கோடு விமான நிலையத்தில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் விபத்துக்குள்ளானதில் இதுவரை 18 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 150 - க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த நிலையில் இந்த விமான விபத்துக்கு விமானியின் தவறான முடிவும்தான் காரணம் என்று கருப்புப் பெட்டிமூலம் தெரியவந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

விமானத்தின் கடைசி நிமிட  தகவல் வரை அடங்கிய கருப்புப் பெட்டியை ஆய்வு செய்ததில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த விபத்து குறித்து, காரிப்பூர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கையில் ’அலட்சியத்தினால் ஏற்பட்ட விபத்து’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. வழக்கமான முறையை மீறி செயல்பட்டதால் தான் இந்த விபத்து நடைபெற்றதா என்ற கோணத்தில் விசாரணை அதிகாரிகள் விசாரணை செய்துவருகின்றனர்.

முன்னதாக, விபத்து ஏற்படும் முன்னரே விமானி என்ஜினை நிறுத்திவிட்டதாகவும், அதன் காரணமாகவே விமானத்தில் தீப்பிடிப்பது தவிர்க்கப்பட்டது  எனவும் தகவல் வந்தது. ஆனால் இந்த தகவலில் உண்மை இல்லை என நிபுணர்கள்  தெரிவித்துள்ளனர். விமானம் 35 அடி உயரத்தில் இருந்து பள்ளத்தில் விழுந்து இரண்டாக உடையும்வரை இன்ஜின் இயங்கியிருக்கிறது என்பது தெரியவந்துள்ளது. 

மேலும் புதிய திருப்பமாக, விமானி எடுத்த சொந்த முடிவு தான் விபத்துக்கு காரணம்  என்றும் தகவல் வெளியாகியுள்ளது. விமான நிலையத்தின் மேற்குப் புறம் உள்ள 10 - ம் எண் ஓடுதளத்தை விமானி தேர்ந்தெடுத்துள்ளார். ஆனால் கிழக்குப் பக்கம் உள்ள 28 - ம் எண் ஓடுதளம் தான் விமான நிலையத்தின் முதன்மையான ஓடுதளம் மட்டுமல்லாது மோசமான வானிலை நிலவும்போதும் பயன்படுத்தப்படும் ஓடுதளம் என்பது தெரியவந்துள்ளது. 

விமானிக்கு தகவல் அளித்த விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அதிகாரிகளும் 28 - ம் எண் ஓடுதளத்தில் தான் விமானத்தைத் தரையிறக்க அறிவுறுத்தியுள்ளார்கள். விமானியும் அவ்வாறே தரையிறக்க முயற்சி செய்துள்ளார். ஆனால், கனமழை காரணமாக ஓடுதளம் சரியாக தெரியாததால் தரையிறங்கும் முயற்சியைக் கைவிட்ட விமானி, மீண்டும் விமானத்தை பறக்க செய்துள்ளார். இதையடுத்து, இரண்டாவது முயற்சியாக விமானியே சொந்தமாக முடிவெடுத்து கொண்டு 10 - ம் ஓடுதளத்தில் தரையிறக்கியுள்ளார். 10 - ம் எண் ஓடுதளம் சாய்வாகவும், சற்று மேடு பள்ளமாகவும் இருந்ததே விபத்துக்குக் காரணம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

விபத்தில் சிக்கிய விமானம் கடுமையான காற்று வேகத்திலும் தாக்குப்பிடிக்கும் என்பதால் விமானி இந்த முடிவை எடுத்திருக்கலாம்  எனவும், ஆனால், விமானியின் கணிப்பின் படி விமானத்தின் வேகம் குறையவில்லை அதேபோல அவரால் கட்டுப்படுத்த முடியவில்லை. விபத்தைத் தவிர்க்க மீண்டும் பறக்க செய்ய முயற்சி செய்துள்ளார். ஆனால் விமானம் அதற்குள் விபத்தில் சிக்கிவிட்டது என்பது கறுப்புப்பெட்டியின் மூலம் தெரியவந்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

reason for kozhikode flight crash


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->