பாலக்காடு அருகே விசித்திரம்: 4 கண்கள் மற்றும் உள்ளே 2 குட்டி தேங்காய்களுடன் கிடைத்த அபூர்வ தேங்காய்! - Seithipunal
Seithipunal



கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் மண்ணம்பட்டா பகுதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி ஜெயராம் என்பவரது வீட்டுத் தோட்டத்தில் உள்ள மரத்தில் இருந்து பறிக்கப்பட்ட தேங்காய்களை ஊழியர்கள் உரித்தபோது, முற்றிலும் வித்தியாசமான ஒரு விசித்திரமான தேங்காய் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

நான்கு கண்கள்: பொதுவாக இயற்கையாக அனைத்து தேங்காய்களுக்கும் மூன்று கண்கள் மட்டுமே இருக்கும். ஆனால், இந்தத் தேங்காயின் வெளிப்புறத்தில் 4 கண்கள் தெளிவாகக் காணப்பட்டன.

உள்ளே 2 குட்டி தேங்காய்கள்: அந்தத் தேங்காயை உடைத்துப் பார்த்தபோது, அதன் உள்புறத்தில் 2 சிறிய குட்டி தேங்காய்கள் முழுமையாக வளர்ந்த நிலையில் இருந்தன. இந்த அபூர்வ நிகழ்வு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

பொதுமக்கள் குவிப்பு: இந்தத் தேங்காய் குறித்த தகவல் அப்பகுதியில் காட்டுத்தீ போல பரவியதை அடுத்து, மண்ணம்பட்டா மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் ஜெயராமின் வீட்டிற்குத் திரண்டு வந்து இந்த அதிசய தேங்காயைப் பார்வையிட்டுச் செல்கின்றனர்.

இந்த அபூர்வ தேங்காயின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி நெட்டிசன்களிடையே பெரும் வைரலாகி வருகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Rare Coconut with Four Eyes and Two Inner Coconuts Discovered in Palakkad Locals Flock to See


கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?




சினிமா

Seithipunal
--> -->