ராஜமுந்திரி சிறைக்கு செல்லும் ரஜினிகாந்த்! காரணம் என்ன?
Rajinikanth going to meet Chandrababu Naidu in jail
ஆந்திர மாநில முன்னாள் முதல்வரும் தெலுங்கு தேச கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு கடந்த 2019 ஆம் ஆண்டு இளைஞர் திறன் மேம்பாட்டு கழகத்தின் சார்பில் தனியார் நிறுவனத்தின் பங்களிப்புடன் தொடங்கப்பட்ட திட்டத்தில் அவர் 118 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக ஊழல் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சந்திரபாபு நாயுடு ஆந்திர மாநில சிறப்பு புலனாய்வு போலீசாரால் விசாரணை நடத்தப்பட்டு விஜயவாடா லஞ்ச ஒழிப்புத் துறை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த விஜயவாடா லஞ்ச ஒழிப்புத் துறை நீதிமன்றம் ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் வழங்கியது.

இதனை அடுத்து சந்திரபாபு நாயுடு சார்பில் தாக்கல் செய்த ஜாமீன் மனுவையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த நிலையில் ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தற்போது ராஜமுந்திரி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நாளை சந்தித்த அனுமதி கோரி சிறைச்சாலையில் மனு வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இரண்டு நாட்களுக்கு முன்பு நடிகர் ரஜினிகாந்த் சந்திரபாபு நாயுடுவின் மகனிடம் தொலைபேசியில் ஆறுதல் கூறியதாகவும் தகவல் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Rajinikanth going to meet Chandrababu Naidu in jail