ராஜஸ்தான் பள்ளி மேற்கூரை இடிந்தது 6 மாணவர்கள் பலி! பிரதமர் மோடி இரங்கல்!
rajasthan school Roof Collapses students death PM Modi condolence
ராஜஸ்தானின் ஜலாவர் மாவட்டம் பிப்லோடியில் செயல்பட்டு வந்த அரசு தொடக்கப்பள்ளி இன்று காலை வழக்கம் போல திறக்கப்பட்டது. பள்ளி செயல்படத் தொடங்கிய சில நிமிடங்களில், அதன் பழுதடைந்த மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது.
சுமார் 60-க்கும் மேற்பட்ட மாணவர்கள் உள்ளே இருந்த நிலையில், இடிபாடுகளுக்குள் சிக்கிய மாணவர்களின் அலறல் சத்தம் அக்கம் பக்க மக்களை பயமுறுத்தியது. அவர்கள் விரைந்து வந்து கான்கிரீட் துண்டுகளை அகற்றி மாணவர்களை மீட்டனர். விபத்தில் 4 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்;
காயமடைந்த 17 மாணவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் இரு மாணவர்கள் சிகிச்சை பலனின்றி பலியாகினர்.
தற்போது மீட்பு பணியில் போலீசார், தீயணைப்பு துறையினர், நிவாரணப் படையினர், 4 ஜே.சி.பி. எந்திரங்கள் என பலர் ஈடுபட்டனர்.
இந்த துயரமான சம்பவத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த வருத்தம் தெரிவித்துள்ளார். “ராஜஸ்தானில் பள்ளி இடிந்து விழுந்து மாணவர்கள் உயிரிழந்தது மிகவும் கவலையளிக்கிறது. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன். அரசு மற்றும் அதிகாரிகள் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கி வருகின்றனர்” என அவரது அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
English Summary
rajasthan school Roof Collapses students death PM Modi condolence