ஆர்.எஸ்.எஸ் அலுவலகம் செல்லும் முன் என் தலையை வெட்டிக் கொள்வேன்.! - ராகுல் பேச்சு...!! - Seithipunal
Seithipunal


காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாரத ஒற்றுமையாத்திரை மேற்கொண்டு வருகிறார். இந்த யாத்திரையானது தற்பொழுது பஞ்சாப் மாநிலத்தை அடைந்துள்ளது. இந்த நிலையில் பஞ்சாப் மாநிலம் ஹோஷியார்பூரில் செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தியிடம் "உங்களின் சித்தப்பா மகனும் பாஜக எம்பியுமான வருண் காந்தியுடன் கைகோர்க்க வாய்ப்பு உள்ளதா..??" என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதில் அளித்த ராகுல் காந்தி "வருண் காந்தியின் சித்தாந்தமும் எனது சித்தாந்தமும் வெவ்வேறு. இரண்டும் பொருந்தாத ஒன்று. என்னால் ஆர்எஸ்எஸ் அலுவலகத்திற்கு செல்ல முடியாது. அவ்வாறு செல்லும் சூழல் ஏற்பட்டால் எனது கழுத்தை நானே அறுத்துக் கொள்வேன். ஒரு சமயத்தில் ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தை வருன் காந்தி ஏற்றுக் கொண்டார்.

ஆர்எஸ்எஸ் நல்ல காரியங்களை செய்வதாக கூறினார். இப்பொழுதும் அதே நிலைப்பாட்டில் தான் இருப்பார் என நம்புகிறேன். ஒருவேளை நான் அவரை சந்தித்தால் பாசத்துடன் கட்டிப்பிடிக்கலாம். ஆனால் ஒரு பொழுதும் அவரது சித்தாந்தத்தை ஏற்க மாட்டேன். எனது பாதயாத்திரையில் அவர் கலந்து கொண்டால் பிரச்சனை ஏற்படலாம்" என செய்தியாளர்களின் கேள்விக்கு ராகுல் காந்தி பதிலளித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

RahulGandhi said that he will cut off his head before going to RSS office


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->