கபடி போட்டியில் கலந்து கொண்ட ராகுல் காந்தி.. ஹரியானா மாநிலத்தில் நெகிழ்ச்சி.!
Rahul Ganthi In Hariyana kabbadi
ஹரியானா மாநிலத்தில் நடந்த உள்ளூர் கபடி போட்டியில் ராகுல் காந்தி கலந்து கொண்டார்.
காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்ரா எனும் பெயரில் இந்திய ஒற்றுமை பயணத்தை மேற்கொண்டு வருகின்றார். கடந்த செப்டம்பர் 7ஆம் தேதி கன்னியாகுமரியில் துவங்கிய இந்த பயணம் 150 நாட்களில் 3500 கிலோ மீட்டர் கடந்து காஷ்மீர் வரை சென்று கொண்டிருக்கிறது.

இதில் ராகுல் காந்தி தமிழகம், கேரளா, கர்நாடகா, ராஜஸ்தான், மகாராஷ்டிரா, உத்தர பிரதேசம், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களை கடந்து ஹரியானா வந்தடைந்துள்ளார். கடந்த 21ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை ஹரியானா வழியே சென்ற இந்த யாத்திரை மீண்டும் ஹரியானா மாநிலத்தில் நுழைந்துள்ளது.
நேற்று ஹரியானா மாநிலத்தில் நடைபெற்ற கபடி போட்டி ஒன்றில் ராகுல் காந்தி கலந்து கொண்டார். கபடி போட்டியை பார்த்த ராகுல் காந்தி அங்கிருக்கும் வீராங்கனைகளுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். அப்போது அவருடன் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மற்றும் குத்துச்சண்டை வீரர் விஜிந்தர் சிங் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
English Summary
Rahul Ganthi In Hariyana kabbadi