பஞ்சாப் மாநில முன்னாள் முதலமைச்சருக்கு பாஜகவில் உயர் பதவி.! - Seithipunal
Seithipunal


பஞ்சாப் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சராகவும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமாக இருந்தவர் அமரீந்தர் சிங். இவர் கடந்த ஆண்டுகளுக்கு முன்பு  காங்கிரசில் இருந்து விலகி புதிய கட்சி தொடங்கினார். 

அதன் பின்னர், கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதிய கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைத்தார். தற்போது இவருக்கு பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் பதவி வழங்கப்பட்டுள்ளது. 

இதேப்போன்று பஞ்சாப் காங்கிரஸ் தலைவராக இருந்து பின்னர் பாஜகவில் இணைந்த மற்றொரு மூத்த தலைவரான சுனில் ஜாக்கருக்கும், பாஜகவில் தேசிய செயற்குழுவில் பதவி தரப்பட்டுள்ளது. இவர்களைத் தொடர்ந்து, உத்தரபிரதேச மாநிலத்தின் அமைச்சர் சுவாதந்திர தேவ் சிங்குக்கும் தேசிய செயற்குழு உறுப்பினர் பதவி அளிக்கப்பட்டு இருக்கிறது. 

இதையடுத்து, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் செய்தி தொடர்பாளரான ஜெய்வீர் ஷெர்ஜில், பாஜகவின் தேசிய செய்தி தொடர்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதெபோல், நேற்று மேலும் சில மூத்த நிர்வாகிகள் முக்கிய பதவிகளில் நியமிக்கப்பட்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

punjap state ex chief minister higher post in bjp


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->