குஜராத்தில் வரும் மார்ச் மாதத்திலிருந்து இலவச மின்சாரம் - பகவந்த் மான்.!
punjap chief minister bagavanth maan press meet for gujarat election
குஜராத் மாநிலத்தில் டிசம்பர் 1 மற்றும் டிசம்பர் 5 என்று இரு கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. பா.ஜ.க. ஆட்சி செய்யும் குஜராத் மாநிலத்தில், இந்த முறை காங்கிரசுடன் சேர்ந்து கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியும் போட்டியிடுகிறது.
இந்நிலையில் குஜராத்தில் நாளை வாக்கு பதிவு நடைபெறவுள்ள நிலையில், குஜராத் மாநிலத்தின் ஆமதாபாத் நகரில் செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் பேசியதாவது;-

"இந்த தேர்தலில் நிச்சயம் வெற்றி பெறுவோம் என்ற உறுதியான நம்பிக்கை உள்ளது. வடமேற்கு மாநிலங்களில் ஒன்றான குஜராத்தில் வருகிற மார்ச் மாதத்தில் இருந்து இலவச மின்சாரம் கிடைக்கும். இதற்கு முன்பு, டெல்லியில் இலவச மின்சாரம் தருவோம் என்று நாங்கள் வாக்குறுதி அளித்தோம்.
அப்போது, எதிர்க்கட்சியினர் அது எப்படி உங்களால் முடியும்? என்று கேட்டனர். ஆனால், நாங்கள் அதை செய்தோம். பஞ்சாப்பிலும் இதை செய்தோம். அதேபோல், குஜராத்திலும் நாங்கள் வருகிற மார்ச் மாதத்தில் இருந்து மக்களுக்கு இலவச மின்சாரம் வழங்குவோம்.
நாங்கள் குஜராத்தில் நிச்சயம் ஆட்சி அமைப்போம். சிலர் எங்களை பார்த்து, பா.ஜ.க.வின் பி அணி என்றும், வேறு சிலர் காங்கிரசின் பி அணி என்றும் கூறி வருகின்றனர். ஆனால், நாங்கள் 130 கோடி மக்களின் ஏ அணி என்று அவர் பேசியுள்ளார்.
English Summary
punjap chief minister bagavanth maan press meet for gujarat election