பள்ளி மாணவியை கல்லூரி படிக்கவைத்து., மாணவியுடன் ஓட்டம் பிடித்த ஆசிரியர்.! கைக்குழந்தையுடன் காவல்நிலையத்தில் மனைவி.! - Seithipunal
Seithipunal


புதுச்சேரியில் பள்ளி ஆசிரியர் ஒருவர், தனது வகுப்பில் படித்த பள்ளி மாணவியை, கல்லூரி வரை படிக்க வைத்து, அந்த மாணவியுடன் ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

புதுச்சேரி திருபுவனை பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார். இவர் அரசுப் பள்ளி ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் கலிதீர்த்தால்குப்பம் பகுதியைச் சேர்ந்த மகேஸ்வரி என்பவருக்கும் கடந்த 16 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. 

கடந்த 2018 ஆம் ஆண்டு இந்த தம்பதிக்கு அழகான ஒரு ஆண் குழந்தையும் பிறந்துள்ளது. அதன் பின்னர் கணவன் - மனைவி இருவருக்கும் அடிக்கடி சண்டை வந்துள்ளது. இதற்கு முக்கிய காரணமாக செந்தில்குமார் தனது பள்ளியில் படித்த பள்ளி மாணவி ரேகா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது தான் என்று சொல்லப்படுகிறது.

மேலும் அந்த பள்ளி மாணவியை ஆசை வார்த்தை கூறி, உன்னை திருமணம் செய்து கொள்வதாகவும் கூறி, அந்த மாணவியை கல்லூரி வரை செந்தில்குமார் படிக்க வைத்துள்ளார். இவர்களின் கள்ளக்காதல் நாளுக்கு நாள் வளர்ந்து வந்துள்ளது.

இந்த நிலையில்தான், கல்லூரி மாணவி ரேகா தனது கல்லூரி படிப்பை முடித்துள்ளார். இதனை அடுத்து ஆசிரியர் செந்தில்குமாரும், கல்லூரி மாணவியும் சில தினங்களுக்கு முன்பு ஊரைவிட்டு ஓட்டம் பிடித்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த செந்தில்குமாரின் மனைவி மகேஸ்வரி, திருபுவனை காவல் நிலையத்திலும், வில்லியனூர் மகளிர் காவல் நிலையத்திலும் புகார் அளித்தார். 

ஆனால், மகேஸ்வரியின் புகார் குறித்து போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால், புதுச்சேரி முதுநிலை காவல் கண்காணிப்பாளர் லோகேஸ்வரன் இடம், மகேஸ்வரி தனது குழந்தையுடன் வந்து புகார் அளித்து சென்றுள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

puducherry thipuvanai love issue


கருத்துக் கணிப்பு

மத்திய அரசை ப.சிதம்பரம் விமர்ச்சிப்பதை தடுக்கவே இந்த சிபிஐ ரெய்டு - செல்வப்பெருந்தகையின் இந்த குற்றச்சாட்டு?Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசை ப.சிதம்பரம் விமர்ச்சிப்பதை தடுக்கவே இந்த சிபிஐ ரெய்டு - செல்வப்பெருந்தகையின் இந்த குற்றச்சாட்டு?
Seithipunal