புதுச்சேரி | மகனின் ஆதங்க பேச்சு: மனமுடைந்து உயிரை மாய்த்து கொண்ட தந்தை!
Puducherry father commits suicide
புதுச்சேரி, காலாப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் அய்யனார் (வயது 48) இவர் காலாப்பட்டு தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் சுமார் 20 ஆண்டுகளாக ஊழியராக வேலை பார்த்து வந்தார்.
இவருக்கு 2 மகள்கள் 1 மகன் உள்ளனர். இவர் குடும்பத்துடன் அரசு குடியிருப்பு பகுதியில் வசித்து வந்தார். அய்யனார் பல்கலைக்கழகத்திற்கு வேலைக்குச் செல்லாமல் மது அருந்திவிட்டு வீட்டிற்க்கு வந்ததால் கணவன்-மனைவியிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
அய்யனாரின் மகன் காலையில் வேலைக்கு சென்று விட்டு இரவு வீட்டிற்க்கு வந்தபோது தந்தையை, ஏன் இப்படி குடித்து கொண்டிருக்கிறாய் திருமண வயதில் நானும் தங்கையும் உள்ளோம் இன்றுடன் மது அருந்துவதை நிறுத்தி விட வேண்டும் என ஆதங்கமாக பேசி இருக்கிறார்.

இதனால் அய்யனார் மது அருந்துவதை நிறுத்தி விடுகிறேன் என தெரிவித்து விட்டு இரவு முழுவதும் வீட்டின் மொட்டை மாடியில் மது அருந்தியுள்ளார்.
நேற்று அதிகாலை அய்யனாரின் மகனும் மகளும் வீட்டிற்கு வெளியே வந்து பார்த்தபோது அய்யனார் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இதனை பார்த்த குடும்பத்தினர் கதறி துடித்தனர். பின்னர் இது குறித்து காலாப்பட்டு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அய்யனார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக காலாப்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
Puducherry father commits suicide