ஜன.23 முதல் குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1,000... முதல்வர் தொடங்கி வைக்கிறார்..!! - Seithipunal
Seithipunal


கடந்த 2021 ஆம் ஆண்டு தமிழக சட்டமன்ற பொது தேர்தலில் திமுக தனது தேர்தல் அறிக்கையில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம்தோறும் ரூ.1,000 உரிமை தொகை வழங்கப்படும் என தேர்தல் வாக்குறுதி அளித்தது. இதனை அடுத்து ஆட்சி கட்டிலில் அமர்ந்த திமுக அரசு தற்போது வரை குடும்ப பதவிகளுக்கான ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை திட்டத்தை செயல்படுத்தவில்லை.

எனினும் கூடிய விரைவில் செயல்படுத்தப்படும் என திமுக அமைச்சர்கள் தெரிவித்து வருகின்றனர். அடுத்த மாதம் தாக்கல் செய்யப்பட உள்ள தமிழக பட்ஜெட்டில் குடும்ப தலைவிகளுக்கான ஆயிரம் ரூபாய் உரிமை தொகை திட்டம் குறித்து அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் புதுச்சேரி மாநிலத்தில் குடும்ப தலைவர்களுக்கான ஆயிரம் ரூபாய் உரிமை தொகை திட்டத்தை முதல்வர் ரங்கசாமி கடந்த புதுச்சேரி சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அறிவித்திருந்தார். இந்த திட்டத்திற்கான ஆவணங்களில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கையொப்பமிட்டு ஒப்புதல் அளித்துள்ளார்.

இதற்கிடையே புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் குடும்ப தலைவிகளுக்கு ரூ.1,000 உரிமை தொகை திட்டத்தை முதல்வர் ரங்கசாமி உடன் சேர்ந்து வரும் ஜனவரி 23ஆம் தேதி தொடங்கி வைக்க உள்ளதாக கூறியுள்ளார். மேலும் பொது மக்களுக்கு நல்லது எதுவோ அதை செய்து கொண்டிருக்கிறோம்.

மக்களுக்காக நல்லது செய்வதில் எந்த பாரபட்சமும் கிடையாது என அவர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் குடும்பத் தலைவர்களுக்கான ரூ.1,000 உரிமை தொகை திட்டத்தை பொதுமக்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் நிலையில் புதுச்சேரியில் அத்திட்டம் செயல்பாட்டுக்கு வரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Puducherry CM launches Rs1000 for heads of families from Jan23


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->