புதுச்சேரி | மூதாட்டி இடம் பண மோசடி செய்து, சொகுசு பண்ணை வீடு வாங்கிய பலே திருடன்!
Puducherry CBCID police Arrest thief
புதுச்சேரியில் பிரெஞ்சு குடியுரிமை பெற்ற மூதாட்டி இடம் பண மோசடி செய்து, சொகுசு பண்ணை வீடு வாங்கிய பலே திருடனை போலீசார் கைது செய்துள்ளனர்.
புதுச்சேரி லாஸ்பேட்டை பகுதியைச் சேர்ந்த மூதாட்டி ஆதிலட்சுமி. இவர் பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர். இந்த நிலையில் இவருடைய வங்கி கணக்கில் இருந்து பணம் மற்றும் நகைகள் மாயமானதாக புதுச்சேரி சிபிசிஐடி போலீசாரிடம் புகார் அளித்தார்.

இந்த புகாரை பெற்றுக் கொண்ட போலீசார், வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், ஆதிலட்சுமியின் கார் ஓட்டுனரான ஜெயராமன் மீது போலீசார் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இதனை அடுத்து அவரின் நடவடிக்கைகளை சிபிசிஐடி போலீசார் கண்காணித்து வந்தனர். அப்போது மூதாட்டி ஆதிலட்சுமிக்கு சொந்தமான பண்ணை வீட்டை, அவருக்குத் தெரியாமல் நண்பன் பெயருக்கு ஓட்டுநர் ஜெயராமன் மாற்றியது தெரியவந்தது.

மேலும் மூதாட்டியின் வங்கி கணக்கில் இருந்த இரண்டு கோடி ரூபாய் பணம், நகைகளை எடுத்து பண்ணை வீடு ஒன்று வாங்கியதும் தெரியவந்துள்ளது.
இதனை அடுத்து ஓட்டுனர் ஜெயராமனை கைது செய்த போலீசார் அவருக்கு அவரின் கூட்டாளிகளை தேடி வருகின்றனர்.
English Summary
Puducherry CBCID police Arrest thief