அரசு பள்ளி மாணவர்களுக்கு 10% இட ஒதுக்கீடு.! புதுச்சேரி அமைச்சரவை ஒப்புதல்.!! - Seithipunal
Seithipunal


புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 10% உள்ஒதுக்கீடு வழங்குக வேண்டும் என அம்மாநில முதல்வர் ரங்கசாமிக்கு புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் கடந்த ஜூலை 18ஆம் தேதி பரிந்துரை செய்திருந்தார்.

மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கான உள்ஒதுக்கீட்டை உடனடியாக நடைமுறைப்படுத்தவும் ஆளுநர் தமிழிசை கோரிக்கை விடுத்திருந்தார். துணை நிலை ஆளுநர் தமிழிசை பரிந்துரை குறித்து புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி பரிசீலனைக்கு எடுத்துக் கொண்ட நிலையில் இன்று அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.

இந்த அமைச்சரவை கூட்டத்தில் புதுச்சேரியில் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு உயர்கல்வியில் 10% இட ஒதுக்கீடு வழங்க புதுச்சேரி அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. இதனை அடுத்து புதுச்சேரியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 10% இட ஒதுக்கீடு வழங்கும் ஒப்புதல் கோப்புகளில் முதல்வர் ரங்கசாமி கையெழுத்திட்டார்.

அமைச்சரவை ஒப்புதல் வழங்கிய கோப்பை துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்களுக்கு அனுப்ப உள்ளதாக புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார். இதன் மூலமாக புதுச்சேரியில் பயிலும் அரசு பள்ளி மாணவர்கள் 37 இடங்கள் எம்.பி.பி.எஸ், 11 பல் மருத்துவ இடங்களில் படிக்க வாய்ப்பு உருவாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Puducherry cabinet approves 10percentage seat reservation for govt school students


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->