அசோ...பேனரால் கிளம்பிய போராட்டம்! 1700 வழக்குகள், நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது...!-நடந்தது என்ன...?
protest started by banner 1700 cases more than hundred people arrested What happened
உத்தரப் பிரதேசத்தின் கான்பூரில் மீலாதுன் நபி முன்னிட்டு வைக்கப்பட்ட “ஐ லவ் முஹம்மது” பேனர் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதைத் தொடர்ந்து காவலர்கள் FIR பதிவு செய்தது, மாநிலம் முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தியது.இந்தச் சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, முஸ்லிம் சமூகத்தினர் பல நகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அதற்கு பதிலளிக்கும் வகையில், இந்து அமைப்பினரும் “ஐ லவ் மகாதேவ்” பதாகைகளுடன் தெருக்களில் களம் இறங்கினர்.“ஐ லவ் முஹம்மது என்பது குற்றமா?” என கேள்வி எழுப்பிய ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா, உ.பி. காவலில் நடவடிக்கையை கடுமையாக கண்டித்தார்.
இதற்கிடையே, பல்வேறு நகரங்களில் வன்முறை சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன. அதிலும் குறிப்பாக பரேலியில் வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பிறகு நடந்த பேரணியில், சிலர் காவர்களிடம் மீது கற்கள் வீசியதால் சூழல் பதற்றமடைந்தது. இந்நிலைமை கட்டுக்குள் கொண்டு வர காவலர்கள் தடியடி நடத்தினர்.
இதில் 10 காவலர்கள் காயமடைந்தனர்.இதுவரை 8 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், 50க்கும் மேற்பட்டோர் சந்தேக நபர்களாக காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இதில் மொத்தம் 1700க்கும் மேற்பட்ட வழக்குகள் அடையாளம் தெரியாத நபர்களுக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவலர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், போராட்டங்களுக்கு அழைப்பு விடுத்த இத்தேஹாத்-இ-மில்லத் கவுன்சில் தலைவர் தௌகிர் ராசா இன்று (சனிக்கிழமை) கைது செய்யப்பட்டார். அவர் வெளியிட்ட வீடியோ அழைப்புக்குப் பிறகே சூழல் அதிகரித்து, பதற்ற நிலை ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
English Summary
protest started by banner 1700 cases more than hundred people arrested What happened