தேசியப் பற்றைப் போற்றும் நடவடிக்கை! பள்ளிகளில் 'வந்தே மாதரம்' கட்டாயம்...! - அதிரடி உத்தரவைப் பிறப்பித்தது மேற்கு வங்க அரசு! - Seithipunal
Seithipunal


மேற்கு வங்காள சட்டசபைத் தேர்தலில் 15 ஆண்டுகளாக நீடித்த திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து, பாரதிய ஜனதா கட்சி வரலாற்றுச் சாதனை வெற்றியை பதிவு செய்துள்ளது.புதிய ஆட்சியை அமைப்பதற்காக, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பாரதிய ஜனதா சட்டமன்ற உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டம் கொல்கத்தாவில் நடைபெற்றது.

அந்த கூட்டத்தில் சுவேந்து அதிகாரி புதிய முதல்-மந்திரியாக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வெளியிட்டார்.இதனைத் தொடர்ந்து, மேற்கு வங்காள கவர்னர் ஆர்.என்.ரவியை சந்தித்த சுவேந்து அதிகாரி, ஆட்சி அமைக்க உரிமை கோரியதாக தெரிவிக்கப்படுகிறது.

பின்னர் அவரை ஆட்சி அமைக்க கவர்னர் அதிகாரப்பூர்வமாக அழைத்துள்ளார்.அதனைத் தொடர்ந்து, கொல்கத்தாவில் உள்ள படைவீரர் அணிவகுப்பு மைதானத்தில் கடந்த 9-ஆம் தேதி புதிய அரசின் பதவியேற்பு விழா மிகுந்த கோலாகலமாக நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, அமித்ஷா, மத்திய அமைச்சர்கள், பா.ஜ.க. ஆளும் மாநிலங்களின் முதல்-மந்திரிகள் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்போது, மேற்கு வங்காளத்தின் முதல் பாரதிய ஜனதா முதல்-மந்திரியாக சுவேந்து அதிகாரிக்கு கவர்னர் ஆர்.என்.ரவி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.இதனைத் தொடர்ந்து, பா.ஜ.க. முன்னாள் மாநிலத் தலைவர் திலீப் கோஷ் அமைச்சரவையில் முக்கிய அமைச்சராக பதவியேற்றார்.

மேலும் அக்னிமித்ரா பால், அசோக் கீர்தானியா, சுதிராம் துடு, நிசித் பிராமணிக் உள்ளிட்டோரும் புதிய அமைச்சர்களாக பொறுப்பேற்றுள்ளனர்.இந்த நிலையில், மேற்கு வங்காளத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் தினமும் காலை “வந்தே மாதரம்” பாடலை பாடுவதை கட்டாயமாக்கி புதிய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நடைமுறை முறையாக அமல்படுத்தப்படுகிறதா என்பதை உறுதி செய்ய பள்ளிக்கல்வித்துறை சார்பில் கல்வி நிறுவன தலைவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த முதல்-மந்திரி சுவேந்து அதிகாரி, வரும் திங்கள்கிழமை முதல் மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளிலும் “வந்தே மாதரம்” பாடல் காலை வழிபாட்டு பாடலாக அறிமுகப்படுத்தப்படும் என தெரிவித்ததாக கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

promote nationalism Vande Mataram mandatory schools West Bengal government issues drastic order


கருத்துக் கணிப்பு

முதல்வர் பதவி ஏற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது..



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் பதவி ஏற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது..




Seithipunal
--> -->