தறிகெட்டு ஓடிய தனியார் பேருந்து: மரத்தில் மோதி விபத்து! பயணிகளின் கதி?
private bus hits tree 10 injured
கடலூரில் இருந்து புதுச்சேரிக்கு இன்று காலை ஒரு தனியார் பேருந்து பயணிகளை ஏற்றுக் கொண்டு சென்று கொண்டிருந்தது.
இந்த பேருந்தை குணாளன் என்பவர் ஒட்டி சென்றார். பேருந்து கிருமாம்பாக்கம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த இரு சக்கர வாகனத்தின் மீது பேருந்து மோதாமல் இருக்க ஓட்டுனர் குணாளன் பேருந்தை திரும்பியுள்ளார்.
ஆனால் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதி பின்னர் சாலையோரம் இருந்த மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 10க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்தனர். இதனை பார்த்த அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் உடனடியாக காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்தவர்களை மீட்டு அவசர ஊர்தி மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக போக்குவரத்து துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தில் உயிர் சேதம் எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
English Summary
private bus hits tree 10 injured