ஆமதாபாத்தில் ஏர் இந்தியா விமான விபத்து: முதற்கட்ட விசாரணை அறிக்கை சமர்ப்பிப்பு...! - Seithipunal
Seithipunal


ஆமதாபாத்தில் ஏர் இந்தியா விமான விபத்து தொடர்பாக முதற்கட்ட விசாரணை அறிக்கை மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் லண்டனுக்கு ,242 பேருடன் கடந்த மாதம் 12-ஆம் தேதி புறப்பட்ட ஏர் இந்தியா நிறுவனத்தின் போயிங் 787 - 8 ட்ரீம் லைனர் இரட்டை இன்ஜீன் விமானம், 600 - 800 அடி உயரமே பறந்த நிலையில், சில நிமிடங்களிலேயே கீழே வெடித்து சிதறியது. 

இந்த விபத்தில் குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி உட்பட 241 பேர் உட்பட 275 பேர் உயிரிழந்தனர். ஒரேயொரு பயணி மட்டும் உயிர் தப்பினார். இந்த கோரா விபத்து தொடர்பில் விமானத்தின் கறுப்புப் பெட்டி மீட்கப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

இந்த விமது தொடர்பாக விமான விபத்து புலனாய்வு பணியகம் (AAIB) விசாரணை நடத்தி வந்தது. அத்துடன், AAIB-இன் குழுவினர், சம்பவ இடத்துக்கு நேரில் சென்று, ஆய்வு நடத்தி தகவல்களை சேகரித்தனர்.

இந்நிலையில் இந்த குழுவினர் தங்களது முதற்கட்ட அறிக்கையை மத்திய அரசிடம் சமர்ப்பித்துள்ளதாக கூறப்படுகிறது. குறித்த அறிக்கையில் என்ன இடம் பெற்றுள்ளது என்ற தகவல் வெளியாக வில்லை. இருப்பினும் விபத்துக்கான காரணம் குறித்த முக்கிய தகவல் இடம்பெற்று இருக்கலாம் என கருதப்படுகிறது. விரைவில் இது தொடர்பாக பொது வெளியில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Preliminary investigation report submitted on Air India plane crash in Ahmedabad


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->