2 மாதத்தில் ரூ.150 கோடி சுருட்டல்.. 5 இலட்சம் இந்தியர்களின் பணத்தை கொள்ளையடித்த சீன கும்பல் டெல்லியில் கைது.! - Seithipunal
Seithipunal


செல்போன் செயலிகள் மூலமாக இரண்டு மாதத்தில் சுமார் 5 இலட்சம் இந்தியர்களிடம் இருந்து மொத்தமாக ரூ. 150 கோடியை வாரிச்சுருட்டிய கும்பலைச் சேர்ந்த 10 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். 

இணையங்களில் பல்வேறு ஆபத்துகள் நிறைந்துள்ளது. நாம் இணையவழி ஆபத்துகளில் இருந்து தப்பிக்க முயற்சி செய்தாலும், அவர்கள் நம்மை வலைவிரித்து சிக்க வைக்க பல்வேறு முயற்சிகள் செய்வார்கள். சுதாரிப்புடன் செயல்பட்டால் நமது பணம் மற்றும் தனிநபர் விபரங்கள் திருடப்படாமல் இருக்கும் என்பது நிதர்சனம். 

இணையவழியில் மல்டி லெவல் மார்க்கெட்டிங் என்ற பெயரில் உடனடியாக வருவாய் கிடைக்கும்., இரண்டு மடங்கு ஆதாயம் கிடைக்கும் என்று ஆசைகாட்டிய ஒரு கும்பல் வாடிக்கையாளர்களை தொடர்பு கொண்டுள்ளது. மேலும், உங்களுக்கு வேலை வேண்டுமா? என்று பல நிறுவனங்களின் வாட்சப் எண்களுக்கும் குறுஞ்செய்தி அனுப்பி நமது தகவலை முதலில் திரட்டுவார்கள் அல்லது நம்மை நோட்டமிடுவார்கள். 

பின்னர், நம்மிடம் படிப்படியாக பேசி சில செயலிகள் முதலீடு அல்லது அதில் உள்ள பொருட்களை வாங்க செய்வார்கள். இவ்வாறான ஒரு பகல் மோசடியில் சீனாவை சார்ந்த கும்பல் டெல்லியில் வீடெடுத்து அரங்கேற்றி வந்துள்ளது. Power Bank, EZ Plan, EZ Coin, Sun Factory, Lightening Power Bank உள்ளிட்ட செயலிகள் மேற்கூறிய நூதன முறையில் ஏமாற்றும் கும்பலால் ரூ.300 முதல் இலட்சங்கள் வரை பலரும் முதலீடு செய்துள்ளனர். இந்த செயலிகள் குறித்து செய்யப்பட்ட விளம்பரத்தால், அதிக முதலீடு செய்ய பலரும் Google Play Store செயலில் மேற்கூறிய App-களை தேடி அது ட்ரெண்டிங்கில் இடம் பெற்றது.

இவ்வாறான முதலீடுகள் வெறும் 2 மாதத்தில் ரூ.150 கோடி வரை எட்டியதால் சந்தேகம் அடைந்த டெல்லி சைபர் கிரைம் காவல் துறையினர் இதனை கண்காணிக்கவே, சீனாவை சார்ந்த சர்வரில் இருந்து மேற்கூறிய செயலிகள் பண பரிவர்த்தனை மற்றும் அந்த செயலிகளுக்கான விளம்பரங்கள் போன்றவை இந்தியாவில் அதிகளவில் ஏற்படுத்தப்பட்டுள்ளது உறுதியானது. 

இதனையடுத்து, தீவிர விசாரணை மேற்கொண்ட டெல்லி சைபர் கிரைம் காவல் துறையினர் டெல்லியில் 10 பேர் கொண்ட கும்பலை கைது செய்துள்ளனர். இவர்களிடம் இருந்து சீனாவிற்கு பணம் அனுப்ப தயார் செய்து வைக்கப்பட்டு இருந்த போலியான 100 நிறுவனங்களின் தகவலும் கைப்பற்றப்பட்ட நிலையில், ரூ.11 கோடி பணத்தை முடக்கி வைத்துள்ளனர். 

இணையதளங்களில் உள்ள விளம்பரங்கள் பாதிக்கும் மேலானவை போலியானவை. அதனை நம்பி ஏமாற வேண்டாம்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Power Bank EZ Plan Sun Factory Lightening Power Bank Application Forgery 11 Crew Arrested by Police in Delhi


கருத்துக் கணிப்பு

மாணவர்களின் தேர்வு இரத்து விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் எடுத்துள்ள முடிவுAdvertisement

கருத்துக் கணிப்பு

மாணவர்களின் தேர்வு இரத்து விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் எடுத்துள்ள முடிவு
Seithipunal