26 வகை நாய்கள், 3 வகை பூனைகள், க்யூட்டாக கலக்கலாக நடந்த கண்காட்சி.!
ponichery dog and cat show impress audience
புதுச்சேரி மாநிலத்தில் அரசு கால்நடை பராமரிப்பு மற்றும் கால்நடை நலத் துறை சார்பில் நாய்கள் மற்றும் பூனைகள் கண்காட்சி நடைபெற்றது. இதில் மாநிலம் முழுவதிலும் இருந்து வந்திருந்த 26 வகை நாய்கள் மற்றும் 3 வகை பூனைகள் இந்த கண்காட்சியில் பங்கு பெற்றன.
கால்நடை பராமரிப்பு மற்றும் நலத்துறை சார்பாக புதுச்சேரியில் நடைபெற்ற நாய்கள் மற்றும் பூனைகள் கண்காட்சி புதுச்சேரி கடற்கரை சாலையில் அமைந்துள்ள காந்தி திடலில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் புதுச்சேரியின் மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் மற்றும் புதுச்சேரியின் மாநில முதல்வர் என். ரங்கசாமி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இந்த கண்காட்சியில் லேபர் டாக், ஸ்பிட்ஸ், டாபர்மேன் மற்றும் டால்மேஷன் உட்பட 26 வகையான நாய்கள் கலந்து கொண்டன. மேலும் மூன்று வகையான பூனைகளும் இந்த நிகழ்வில் பங்கு பெற்றன. காவல்துறை சார்பாக கலந்து கொண்ட ஐந்து வகை நாய்கள் சாகசங்களை செய்து காட்டி பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தின.
இந்த நிகழ்விற்கு நடுவர்களாக கால்நடை மருத்துவர்கள் பங்கேற்றனர். அவர்கள் நாய்களின் உடல் வலிமை மற்றும் தோற்றம் ஆகியவற்றின் அடிப்படையில் சிறந்த வளர்ப்பு பிராணிகளை தேர்ந்தெடுத்தனர் அவற்றிற்கு இந்த கண்காட்சி அமைப்பு குழுவின் சார்பாக பரிசுகள் வழங்கப்பட்டன.
English Summary
ponichery dog and cat show impress audience