கோவில் திருவிழாவில் போதையில் நடனம்.. போலீஸ் அதிகாரி சஸ்பெண்ட்..! - Seithipunal
Seithipunal


கேரள மாநிலத்தில் பணியில் இருந்தபோது குடிபோதையில் கோவில் திருவிழாவில் நடனமாடிய போலீஸ் அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

கேரள மாநிலம் இடுக்கியில் உள்ள சந்தன்பாறை காவல் நிலையத்தின் கூடுதல் சப்-இன்ஸ்பெக்டர் கே.பி.ஷாஜி. இவர் தலைமையிலான போலீசார், பூப்பாறையில் நடந்த கோயில் திருவிழாவிற்கு பாதுகாப்பு பணிக்காக சென்றனர். அப்பொழுது திருவிழாவில் பக்தி பாடல் ஒளிபரப்பப்பட்டபோது, பணியில் இருந்த கே.பி.ஷாஜி குடிபோதையில் நடனமாடியுள்ளார்.

இதையடுத்து இவர் நடனமாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதைத்தொடர்ந்து இது தொடர்பாக காவல்துறை சிறப்புப் பிரிவினர் விசாரணை மேற்கொண்டு, இது தொடர்பாக மாவட்ட காவல்துறை அதிகாரியிடம் அறிக்கையை சமர்ப்பித்தனர். இந்நிலையில் பணியின்போது குடிபோதை, தகாத நடத்தை மற்றும் காவல்துறைக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டது ஆகிய காரணங்களால் ஷாஜியை சஸ்பெண்ட் செய்து டிஐஜி உத்தரவிட்டார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Police officer suspended after drunken dance in police uniform at temple festival in kerala


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->