வேலை முடிந்து வீடு திரும்பிய போலீசார் - நொடியில் எடுத்த விபரீத முடிவு.!!
police officer sucide in karnataga
கர்நாடக மாநிலத்தில் உள்ள உத்தர கன்னடா மாவட்டம் கர்வார் பகுதியை சேர்ந்தவர் கீரப்பா. இவர் பண்ட்வால் போலீஸ் நிலையத்தில் உதவி காவல் ஆய்வாளராக பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில், கீரப்பா நேற்று முன் தினம் இரவு பணியை முடித்துவிட்டு வீட்டிற்கு சென்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். நேற்று காலை கீரப்பா நீண்ட நேரமாகியும் பணிக்கு வராததால் சந்தேகமடைந்த சக போலீசார் அவரின் வீட்டிற்கு சென்று பார்த்த போது அவர் அங்குள்ள அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்துள்ளார்.

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள், கீரப்பாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக விசாரணையும் நடத்தி வருகின்றனர். முதல்நாள் வேலைக்கு வந்துவிட்டு வீட்டிற்கு சென்ற போலீசார் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
police officer sucide in karnataga