சிறார் ஆபாச படங்கள் மீதான நடவடிக்கை: 449 இடங்களில் அதிரடி சோதனை... 8 பேர் கைது...! - Seithipunal
Seithipunal


கேரள மாநிலத்தில் சமூக வலைதளங்கள் மூலம் குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பது மற்றும் அவர்களின் ஆபாச படங்களை பரப்புவதாக புகார்கள் எழுந்தன. இதைத்தொடர்ந்து குழந்தைகள் பாலியல் துஷ்பிரயோகம் செய்தவர்களைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, கேரள காவல்துறையின் குழந்தைகள் பாலியல் சுரண்டல் தடுப்புப் பிரிவு போலீசார், மாநிலம் முழுவதும் 449 இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர்.

இதில் குழந்தைகளின் ஆபாச படங்களை இணையதளத்தில் பதிவிட்டோர் கண்டறியப்பட்டு, ஐடி ஊழியர்கள் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் சோதனையில் மொபைல் போன்கள், மோடம்கள், ஹார்ட், டிஸ்க்குகள், மெமரி கார்டுகள், லேப்டாப்கள் மற்றும் குழந்தைகளின் கிராஃபிக் மற்றும் சட்டவிரோத வீடியோக்கள் மற்றும் படங்களைக் கொண்ட கணினிகள் உள்ளிட்ட 212 சாதனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதைத்தொடர்ந்து போலீசார் கைது செய்யப்பட்ட அனைவரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Police arrest 8 from across Kerala after raids in 449 locations for Crackdown on child pornography


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->