ஐயோ பாவம்! பிரதமர் மோடி ஜோ பைடனின் புற்றுநோய் குறித்து வெளியிட்ட பதிவு..!
PM Modis post about Joe Biden cancer
அமெரிக்கா நாட்டின் முன்னாள் அதிபர் 'ஜோ பைடன்' அவர்களுக்கு தீவிரமான Prostate வகை ''புற்றுநோய்'' பாதிப்பு இருப்பது தெரிய வந்துள்ளது.இதனால் உலக மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.இந்தப் புற்றுநோய் ஜோ பைடனின் எலும்புகளுக்கும் தீவிரமாக பரவி உள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஜோ பைடனுக்கு புற்றுநோய் பாதிப்பு மிக மோசமடைந்து தீவிர நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி, 'ஜோ பைட ன் விரைவில் குணமடைய வேண்டும்' என்று தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தப்பாக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி:
அந்தப் பதிவில், "ஜோ பைடனின் உடல்நிலை குறித்து அறிந்து மிகவும் கவலையடைந்தேன். அவர் விரைவாகவும் முழுமையாகவும் குணமடைய எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
டாக்டர் ஜில் பைடன் மற்றும் அவரது குடும்பத்தினருடன் எங்கள் எண்ணங்கள் உள்ளன" என்று பதிவிட்டுள்ளார்.இது தற்போது இணையத்தில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.
English Summary
PM Modis post about Joe Biden cancer