ஒவ்வொருவரும் தங்களின் வீட்டில் நம் தேசியக்கொடியை ஏற்றுங்கள் - பிரதமர் மோடி! - Seithipunal
Seithipunal


கடந்த ஆண்டை போலவே இந்த முறையும் ஒவ்வொரு வீட்டிலும் மூவர்ண கொடியை ஏற்றி, சுதந்திர தினத்தை கொண்டாட வேண்டும் என்று, மன் கி பாத் (மனதின் குரல்) நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களுக்கு பிரமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.

ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் வானொலி மஃப்ளம் மன் கி பாத் (மனதின் குரல்) நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களிடம் உரையாற்றி வரும் பிரதமர் மோடி, இன்று 103-வது மான் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது, 

"அண்மையில் மலைப்பாங்கான பகுதிகளில் நிலச்சரிவு, கனமழை, வெள்ளம் என அண்மையில் ஏற்பட்ட இயற்கை சீற்றங்கள் காரணமாக மக்கள் அவதியடைந்தனர்.

வெள்ளத்தின் போது நிவாரண பணிகளை மேற்கொண்ட தேசிய பேரிடர் மீட்பு குழு மற்றும் ராணுவத்துக்கு பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன். 

இந்த மழைக் காலம் மரம் வளர்ப்பதற்கும், நீர் பாதுகாப்புக்கும் சமமாக முக்கியமானது. அதே சமயத்தில் மக்கள் முழு விழிப்புணர்வு, பொறுப்புடன் நீர் பாதுகாப்புக்கான முயற்சிகளை மேற் கொண்டு வருகின்றனர். 

இன்னும் சில நாட்களில் நடைபெற உள்ள சுதந்திர தின விழாவில் அனைவரும் அங்கம் வகிப்போம். நம் நாட்டின் சுதந்திரத்திற்காக செய்த எண்ணற்ற தியாகங்களையும், சுதந்திரத்தின் மதிப்பை நாம் உணர்வோம்" என்று பிரதமர் மோடி பேசினார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

PM Modi Say August 15 independent day national flag in our home


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->