பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை அவசர ஆலோசனை!
PM Modi consultation in central cabinet
டெல்லியில் மத்திய அமைச்சரவை கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்று வருகிறது.
கடந்த மாதம் 20ஆம் தேதி மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில் பிரதமர் மோடி மணிப்பூர் குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என 'INDIA' கூட்டணியை சேர்ந்த எதிர்க்கட்சிகள் முதல் நாளில் இருந்தே அமளியில் ஈடுபட்டு வருகின்றன.
மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என்பதால் நாடாளுமன்றத்தின் அனைத்து அலுவல்களையும் ஒத்திவைக்க வேண்டும் என்பது எதிர்கட்சிகளின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.
பிரதமர் மோடியை நாடாளுமன்றத்தில் பேச வைக்கும் நோக்கில் எதிர்க்கட்சிகள் காங்கிரஸ் மத்திய அரசுக்கு எதிராக மக்களவையில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தது.

அந்த தீர்மானம் மீதான விவாதம் நேற்று தொடங்கிய நிலையில் நாளை வரை விவாதம் நடைபெற உள்ளது. நாளை பிரதமர் மோடி பதிலளிக்க உள்ளார்.
மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்று வருகின்றன. இந்த கூட்டத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானம் மற்றும் மசோதாக்கள் குறித்து முக்கிய ஆலோசனையில் அமைச்சர்கள் ஈடுபட்டுள்ளனர்.
English Summary
PM Modi consultation in central cabinet