பஞ்சாப் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் மறைவு - பிரதமர் மோடி இரங்கல்.! - Seithipunal
Seithipunal


பஞ்சாப் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் மறைவு - பிரதமர் மோடி இரங்கல்.!

பஞ்சாப் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் பிரகாஷ் சிங் பாதல். இவர் கடந்த சில நாட்களாக மூச்சு விடுவதில் சிரமத்தை எதிர்கொண்டதால், ஒரு வாரத்திற்கு முன்பு மொஹாலியில் உள்ள ஃபோர்டிஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று இரவு 8 மணியளவில் உயிரிழந்தார். இவரின் மறைவிற்கு அரசியல் கட்சியினர், தொண்டர்கள் என்று அனைவரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அதன் படி நாட்டின் பிரதமர் நரேந்திர மோடியும் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "பிரகாஷ் சிங் பாதலின் மறைவு எனக்கு மிகவும் வருத்தமளிக்கிறது. இந்திய அரசியலின் மகத்தான ஆளுமை மற்றும் நமது தேசத்திற்கு பெரிதும் பங்களித்த ஒரு அரசியல்வாதி. 

அவர் பஞ்சாப் மாநிலத்தின் முன்னேற்றத்திற்காக அயராது உழைத்தார். மிகவும் நெருக்கடியான காலங்களில் கூட மாநிலத்தை விடாமல் வழிநடத்தினார்" என்று குறிப்பிட்டுள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

pm modi condoles to punjap ex chief minister prakash singh badal death


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->