#மத்திய பிரதேசம் || பேருந்து-லாரி மோதியதில் 15 பேர் உயிரிழப்பு.! பிரதமர் மோடி நிதியுதவி அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


மத்திய பிரதேசத்தில் பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி நிதியுதவி அறிவித்துள்ளார்.

மத்திய பிரதேச மாநிலம் ரேவா மாவட்டத்தில் உள்ள சுஹாகி பஹரி பகுதியருகே பேருந்தும், லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தில் சென்ற பயணிகள் 15 பேர் உயிரிழந்தள்ளனர். மேலும் 40 பேர் காயமடைந்துள்ளனர்.

பேருந்தில் பயணம் செய்தவர்கள் அனைவரும் உத்தர பிரதேச மாநில மக்கள் என ரேவா மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு நவ்னீத் பசின் தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து, இந்த விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் போலீசார் தொடர்ந்து ஈடுபட்டு உள்ளனர்.

இந்நிலையில், இந்தக் கோர விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், மத்தியப் பிரதேச மாநிலம் ரேவாவில் தேசிய நெடுஞ்சாலையில் நடந்த விபத்து நெஞ்சை உருக்குகிறது. இதில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். பேருந்து விபத்தில் உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்பத்தினருக்கும் பிரதமர் நிவாரண நிதியிலிருந்து ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ. 50,000 ரூபாய் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

PM Modi announced compansation for 15 killed in madhyapradesh bus lorry accident


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->